search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    கவாஸ்கி நின்ஜா
    X
    கவாஸ்கி நின்ஜா

    இந்தியாவில் அறிமுகமானது புதிய வண்ணத்துடன் கவாஸ்கி நின்ஜா ZX-10R 2020

    ஜப்பானிய நிறுவனமான கவாஸ்கி, கவாஸ்கி நின்ஜா ZX-10R 2020 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    கருப்பு மற்றும் பச்சை வண்ணங்களில் ஆங்காங்கே தங்க நிற ஹைலட்டர்கள் உடன் மிளிர்கிறது புதிய கவாஸ்கி நின்ஜா ZX-10R. தோற்றத்தில் மட்டுமே மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. செயல்பாடுகளில் கவாஸ்கி நின்ஜா ZX-10R பைக்கில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை.

    வருகிற அக்டோபர் முதல் விற்பனைக்கு தயாராக உள்ள கவாஸ்கி நின்ஜா ZX-10R 2020 மாடலின் விலை ரூ.13.99 லட்சம் ஆகும். கவாஸ்கி நின்ஜா ZX-10R வண்ண பிரதபலிப்பாகவே 2020 நின்ஜா 400 பைக்கும் இந்தியாவுக்கும் வரும் என கவாஸ்கி நிறுவனம் கூறியுள்ளது.

    11,200 ஆர்.பி.எம் என்ற கணக்கில் டார்க் வெளியீடு 114.9 என்.எம் ஆக உள்ளது. 998 சிசி நான்கு சிலிண்டர்கள் உடனான என்ஜின் என நின்ஜா ZX-10R 2020 அசத்துகிறது.

    கவாஸ்கி நின்ஜா ZX-10R 2020


    6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ட்ராக்‌ஷன் கன்ட்ரோல், லான்ச் கன்ட்ரோல், மூன்று ரைடிங் மோட், 6 ஆக்சிஸ் ஐ.எம்.யூ, என்ஜின் ப்ரேக் கன்ட்ரோல், ஏபிஸ் என அத்தனை நவீன அப்டேட்களுடன் களம் இறக்கப்பட்டுள்ளது நின்ஜா ZX-10R. வழக்கம்போல் சிங்கிள் சீட்டர் ரகமாகவே வெளியாகியுள்ளது.

    டுகாட்டி பனிகேல் வி4, சுசூகி ஜி.எஸ்.எக்ஸ்-R1000, ஹோண்டா சிபிஆர்-1000ஆர்.ஆர், யமஹா ஒய்.இசட்.எஃப்-ஆர்1, பிஎம்டபிள்யூ எஸ் 1000 ஆர்.ஆர் மற்றும் அப்ரில்லியா ஆர்.எஸ்.வி.4 ஆர்.ஆர் ஆகிய பைக்குகளுக்கு கடும் போட்டியாக 2020 கவாஸ்கி நின்ஜா ZX-10R இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×