search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    பென்லி லியோன்சினோ 500
    X
    பென்லி லியோன்சினோ 500

    இந்தியாவில் பென்லி லியோன்சினோ 500 அறிமுகம்

    பென்லி நிறுவனத்தின் லியோன்சினோ 500 பிரீமியம் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.



    பென்லி லியோன்சினோ 500 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 4.79 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

    லியோன்சினோ ஸ்டிரீட் நேக்கட் மோட்டார்சைக்கிள் ஆகும். இதில் அந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த டி.ஆர்.கே.502 ட்வின் மாடல்களில் வழங்கப்பட்ட என்ஜின்களே வழங்கப்பட்டுள்ளன. லியோன்சினோ 500 மாடல் டி.என்.டி.300 மற்றும் டி.ஆர்.கே.502 மாடல்களுக்கு மத்தியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

    புதிய மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 10,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்துடன் லியோன்சினோ 500 வாங்குவோருக்கு ஐந்து ஆண்டுகள் வாரண்டியும் வழங்கப்படுகிறது. 

    பென்லி லியோன்சினோ 500

    லியோன்சினோ 500 மாடலில் வழக்கமான வட்ட வடிவம் கொண்ச ஹெட்லேம்ப் மற்றும் அதிநவீன ப்ரோஜெக்டர் வழங்கப்பட்டுள்ளன. மாடலின் முன்புறம் சிங்கம் போன்ற மெட்டல் ஆர்னமென்ட் வழங்கப்பட்டுள்ளது. இதன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் முழுமையான டிஜிட்டல் வடிவம் கொண்டிருக்கிறது. 

    இதில் 500சிசி பேரலெல் ட்வின் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளன. இது 47.5 பி.எஸ். @8500 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 445 என்.எம். டார்க் @5000 ஆர்.பி.எம். வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் முன்புறம் 50 எம்.எம். அப்சைடு டவுன் ஃபோர்க், பின்புறம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஷாக் அப்சார்பர் வழங்கப்பட்டுள்ளது.

    பிரேக்கிங்கிற்கு முன்புறம் 320 எம்.எம். ட்வின் டிஸ்க் செட்டப், பின்புறம் 260 எம்.எம். டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்படுகிறது. பென்லி லியோன்சினோ 500 மாடல் கவாசகி இசட்650, சி.எஃப்.மோட்டோ 650என்.கே. உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
    Next Story
    ×