search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    யமஹா FZ1
    X
    யமஹா FZ1

    யமஹா பி.எஸ். 6 வாகனங்களின் வெளியீட்டு விவரம்

    பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் யமஹா நிறுவன வாகனங்களின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    யமஹா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வானங்களை இந்தியாவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அறஇமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிக்கையை அந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. 

    யமஹாவின் பி.எஸ். மோட்டார்சைக்கிள்கள் நவம்பர் 2019 முதல் விற்பனைக்கு வருகிறது. யமஹாவின் பி.எஸ். 6 ஸ்கூட்டர்கள் ஜனவரி 2020 முதல் விற்பனைக்கு வரவிருக்கிறது. பி.எஸ். 6 சார்ந்த அப்டேட்களின் போது வாகனங்களின் ஒட்டுமொத்த விலையும் அதிகரிக்கும் என யமஹா தெரிவித்துள்ளது.

    யமஹா எம்.டி. 15

    வாகனத்தின் மாடல் மற்றும் வேரியண்ட்டிற்கு ஏற்ப 12 முதல் 15 சதவிகிதம் வரை வாகனங்களின் விலை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்த வேரியண்ட்களில் சைடு ஸ்டான்டு ஸ்விட்ச் அம்சம் வழங்கப்படலாம். இது வாகனத்தின் சைடு ஸ்டான்டு எடுக்கப்படாத பட்சத்தில் வாகனத்தை ஆன் செய்ய விடாது.

    பி.எஸ். 6 என்ஜின் கொண்ட முதற்கட்ட வாகனங்கள் பற்றி யமஹா இதுவரை எவ்வித தகவலும் வழங்கவில்லை. இந்தியாவில் இந்த ஆண்டு துவக்கம் முதலே யமஹா நிறுவனம் பல்வேறு வாகனங்களை அறிமுகம் செய்தது. புதிதாக FZS V3.0 மற்றும் MT-15 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

    அதன்பின் ஆர்15 வி3.0, எஃப்.இசட்25 மற்றும் ஃபேஸர் 25 மாடல்களின் ஏ.பி.எஸ். பதிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன. இத்துடன் சமீபத்தில் ஆர்15, எஃப்.இசட்.25 மற்றும் ரே இசட் ஸ்கூட்டர்களின் மான்ஸ்டர் எடிஷனும் அறிமுகம் செய்யப்பட்டது.
    Next Story
    ×