என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
சுசுகி ஜிக்சர் எஸ்.எஃப். 250 மோட்டோ ஜி.பி. எடிஷன் அறிமுகம்
Byமாலை மலர்8 Aug 2019 8:09 AM GMT (Updated: 8 Aug 2019 8:09 AM GMT)
சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் தனது ஜிக்சர் எஸ்.எஃப். 250 மோட்டார்சைக்கிளின் மோட்டோ ஜி.பி. எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.
சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் ஜிக்சர் எஸ்.எஃப். 250 மோட்டோ ஜி.பி. எடிஷனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஜிக்சர் எஸ்.எஃப். 250 மோட்டோ ஜி.பி. எடிஷன் விலை ரூ. 1.71 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய மோட்டோ ஜி.பி. எடிஷன் சுசுகி ரேசிங் அணியின் நிறங்கள் மற்றும் ஸ்பான்சர் டீக்கல்களை கொண்டிருக்கிறது. இதில் 2019 ஜி.எஸ்.எக்ஸ். ஆர்.ஆர். மாடலின் ரேசிங் புளு பெயின்ட், எக்ஸ்டார் டீக்கல்கள், வீல்களில் பின்ஸ்ட்ரிப்பிங் செய்யப்பட்டு இருக்கிறது.
ஃபேக்ட்ரி ரேசிங் சார்ந்த நிறம் மற்றும் ஸ்டிக்கர்கள் தவிர ஜிக்சர் எஸ்.எஃப். 250 மாடலில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய மோட்டோ ஜி.பி. எடிஷனில் 249 சிசி சிங்கிள் சிலிண்டர் ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 26.5 பி.ஹெச்.பி. பவர் @9000 ஆர்.பி.எம்.-இலும் 22.6 என்.எம். டார்க் @7500 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.
ஜிக்சர் எஸ்.எஃப். 250 மோட்டோ ஜி.பி. எடிஷனில் ஸ்டான்டர்டு மாடலில் உள்ளதை போன்ற சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் புதிய மோட்டார்சைக்கிளில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டெயில் லைட்கள், ஸ்போர்ட் டூயல் மஃப்ளர், பிரெஷ்டு ஃபினிஷ் அலாய் வீல், ரியர் டையர் ஹக்கர் மற்றும் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் வழங்கப்பட்டுள்ளது.
Next Story
×