என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
விரைவில் இந்தியா வரும் டுகாட்டி மோட்டார்சைக்கிள்
Byமாலை மலர்4 Aug 2019 6:41 AM GMT (Updated: 4 Aug 2019 6:41 AM GMT)
இத்தாலி நாட்டு மோட்டார்சைக்கிள் நிறுவனமான டுகாட்டி விரைவில் தனது புதிய மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
இத்தாலிய மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான டுகாட்டி கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் டியாவெல் மோட்டார்சைக்கிளை காட்சிப்படுத்தியது. தற்போது இந்த மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த டுகாட்டி திட்டமிட்டுள்ளது.
புதிய டுகாட்டி டியாவெல் 1260 இந்தியாவில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என டுகாட்டி இந்தியா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. முந்தைய மாடல் டியாவெல் 1,198 சி.சி. திறன் கொண்டிருந்தது. ஆனால் தற்போது புதிய மாடல் 1,262 சி.சி. திறன் கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த என்ஜின் 159 பி.எஸ். திறன் கொண்டதாகவும் 128.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக்கூடியதாகும். இதன் முன்புறம் 50 எம்.எம். போர்க், பின்புறம் மோனோஷாக் அப்சார்ப் வழங்கப்பட்டுள்ளது. இவை இரண்டுமே அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய வகையில் இருப்பது சிறப்பாகும்.
இதில் மூன்று விதமான டிரைவிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை ஸ்போர்ட், டூரிங், அர்பன் என சாலையின் தன்மைக்கேற்ப வாகனம் செயல்படும் விதத்தை தேர்வு செய்யும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இத்துடன் டிராக்ஷன் கண்ட்ரோல், ஏ.பி.எஸ். வசதி ஆகியனவும் உள்ளன.
இந்தியாவில் புதிய டுகாட்டி டியாவெல் 1260 விலை ரூ.17.50 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×