search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    சி.எஃப். மோட்டோ 300 என்.கே
    X
    சி.எஃப். மோட்டோ 300 என்.கே

    சி.எஃப். மோட்டோ இந்திய முன்பதிவு விவரம்

    ஏ.எம்.டபுள்யூ. மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் சி.எஃப். மோட்டோ மற்றும் நான்கு புதிய மோட்டார்சைக்கிள்களின் இந்திய முன்பதிவு விவரங்களை பார்ப்போம்.



    ஏ.எம்.டபுள்யூ. மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் சி.எஃப். மோட்டோ மற்றும் நான்கு மோட்டார்சைக்கிள்களை ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. 

    புதிய மோட்டார்சைக்கிள்கள் 300 என்.கே., 650 ஜி.டி., 650 என்.கே. மற்றும் 650 எம்.டி. என அழைக்கப்படுகின்றன. இவற்றின் விலை அறிமுக சலுகையின் கீழ் இந்திய சந்தையில் போட்டியை பலப்படுத்தும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. புதிய மோட்டார்சைக்கிள்களுக்கான முன்பதிவுகள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நான்கு சி.எஃப். மோட்டோ மாடல்களும் சி.கே.டி. முறையில் இறக்குமதி செய்யப்பட்டு அந்நிறுவனத்தின் ஐதராபாத் ஆலையில் ஒருங்க்கப்படுகின்றன. இந்நிறுவனத்தின் விற்பனையகங்கள் மும்பை, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா, சென்னை மற்றும் கவுகாத்தி உள்ளிட்ட நகரங்களில் இயங்குகிறது.

    சி.எஃப். மோட்டோ 300 என்.கே. விலை அறிமுக சலுகையின் கீழ் ரூ. 2.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கே.டி.எம். 390 டியூக், பி.எம்.டபுள்யூ. ஜி 310 ஆர் மற்றும் ஹோன்டா சி.பி.300ஆர் மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக அமைகிறது. இந்த பிரிவில் விற்பனையாகும் நான்கு மாடல்களை விட சி.எஃப். மோட்டோ விலை குறைவு ஆகும்.

    300 என்.கே. மாடலில் 292.4சிசி லி்க்விட் கூல்டு சிங்கிள் சிலிண்டர் 4-வால்வ் DOHC என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 33.9 பி.ஹெச்.பி. பவர், 20.5 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.

    சி.எஃப். மோட்டோ 650 என்.கே.

    சி.எஃப். மோட்டோ 650 என்.கே. மாடல் விலை ரூ. 3.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கவாசகி இசட்650 மாடலின் விலையை விட ரூ. 1.70 லட்சம் குறைவாகும். இதில் 649.3சிசி லிக்விட் கூல்டு பேரலெல் ட்வின் சிலி்ண்டர் 8-வால்வ் DOHC என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 61.54 பி.ஹெச்.பி. பவர், 56 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.

    சி.எஃப். மோட்டோ 650 எம்.டி. மாடலின் துவக்க விலை ரூ. 4.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 649.3சிசி லிக்விட் கூல்டு பேரலெல் ட்வின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 70.7 பி.ஹெச்.பி. பவர், 62 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. இந்த மாடல் கவாசகி வெர்சிஸ் 650-க்கு போட்டியாக அமைகிறது.

    சி.எஃப். மோட்டோ 650 ஜி.டி.

    சி.எஃப். மோட்டோ 650 ஜி.டி. மாடலின் விலை ரூ. 5.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 649.3சிசி பேரலெல் ட்வின் 8 வால்வ் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 61.2 பி.ஹெச்.பி. பவர், 58.5 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. 
    Next Story
    ×