search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    பஜாஜ் டாமினர் 400
    X
    பஜாஜ் டாமினர் 400

    இந்தியாவில் பஜாஜ் பல்சர் 150 மற்றும் டாமினர் 400 விலை மாற்றம்

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது பல்சர் 150 மற்றும் டாமினர் 400 மோட்டார்சைக்கிள்களின் விலையை மாற்றியுள்ளது.



    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது பல்சர் 150 ரக மாடல்களின் விலையை இந்தியாவில் மாற்றியமைத்துள்ளது. அந்த வகையில் பல்சர் 150 மாடல்களின் விலை ரூ. 479 இல் துவங்கி அதிகபட்சம் ரூ. 2,980 வரை அதிகமாகி இருக்கிறது. விலை அதிகரிப்பு நியான், சிங்கிள் டிஸ்க் ஏ.பி.எஸ். மற்றும் ட்வின்-டிஸ்க் ஏ.பி.எஸ். என மூன்று வேரியண்ட்களுக்கும் பொருந்தும்.

    இதுதவிர பஜாஜ் ஃபிளாக்‌ஷிப் மாடலான டாமினர் 400 விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2019 பஜாஜ் டாமினர் 400 இந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்ட்டது. இந்நிலையில், இதன் விலை ரூ. 6000 அதிகரிக்கப்பட்டுள்ளது. 

    விலை மாற்றத்தை தொடர்ந்து பஜாஜ் பல்சர் 150 நியான் விலை ரூ. 71,200 இல் துவங்குகிறது. இதன் விலை ஏற்கனவே ரூ. 68,250 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்சமயம் ரூ. 2950 அதிகரிக்கப்பட்டுள்ளது. பஜாஜ் பல்சர் 150 சிங்கிள் டிஸ்க் ஏ.பி.எஸ். மற்றும் ட்வின் டிஸ்க் ஏ.பி.எஸ். விலை முறையே ரூ. 479 மற்றும் ரூ. 499 உயர்த்தப்பட்டுள்ளது.

    பஜாஜ் பல்சர் 150

    அந்த வகையில் இருமாடல்களும் தற்சமயம் ரூ. 84,960 மற்றும் ரூ. 88,838 (விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    2019 பஜாஜ் டாமினர் 400 விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த மோட்டார்சைக்கிள் தற்சமயம் ரூ. 1.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    விலை மாற்றம் தவிர அனைத்து மோட்டார்சைக்கிள்களிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பஜாஜ் பல்சர் 150 மாடலில் 149சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 13.8 பி.ஹெச்.பி. பவர், 13.4 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    டாமினர் 400 மாடலில் 373சிசி, சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 37 பி.ஹெச்.பி. பவர், 34 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. டாமினர் 400 மாடலின் முன்புறம் இன்வெர்ட்டெட் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×