search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    கவாசகி டபுள்யூ800 ஸ்டிரீட்
    X
    கவாசகி டபுள்யூ800 ஸ்டிரீட்

    இந்தியாவில் கவாசகி டபுள்யூ800 ஸ்டிரீட் அறிமுகம்

    கவாசகி நிறுவனத்தின் டபுள்யூ800 ஸ்டிரீட் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.



    கவாசகி நிறுவனம் இந்தியாவில் டபுள்யூ800 ஸ்டிரீட் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய கவாசகி டபுள்யூ800 ஸ்டிரீட் மாடலின் துவக்க விலை ரூ. 7.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் கவசாகி ரெட்ரோ ரக மாடல்களின் புதிய மோட்டார்சைக்கிளாக டபுள்யூ800 ஸ்டிரீட் அறிமுகமாகி இருக்கிறது.

    கவசாகி டபுள்யூ800 ஸ்டிரீட் மாடலில் கிளாசிக்-ரெட்ரோ ஸ்டைலிங் செய்யப்பட்டுள்ளது. இது முதலாம் உலக போர் மோட்டார்சைக்கிள் மாடல்களை தழுவி உருவாகி இருக்கிறது. டபுள்யூ800 மாடல் பழைய கால வடிவமைப்பு மற்றும் உயர் ரக மெட்டல் பாகங்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

    இத்துடன் வட்ட வடிவம் கொண்ட எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், ஸ்கல்ப்ட்டெட் ஃபியூயல் டேன்க், க்ரோம் எக்சாஸ்ட் பைப்கள் வழங்கப்பட்டுள்ளன. கவாசகி டபுள்யூ800 மாடலில் 773சிசி ஏர்-கூல்டு பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த என்ஜினின் செயல்திறன் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், இது 62.9 என்.எம். டார்க் @4800 ஆர்.பி.எம். வழங்கும் என கூறப்படுகிறது. புதிய டபுள்யூ800 மோட்டார்சைக்கிளில் டபுள்-கிரேடில் சேசிஸ் அதிநவீன சஸ்பென்ஷன் உபகரணங்களுடன் வழங்கப்பட்டுள்ளது.

    கவாசகி டபுள்யூ800 ஸ்டிரீட்

    இவை முன்புறம் 41எம்.எம். டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் டூயல் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரேக்கிங்கிற்கு முன்புறம் 320 எம்.எம். டிஸ்க், பின்புறம் 270 எம்.எம். டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல்-சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டுள்ளது.

    கவாசகி டபுள்யூ800 ஸ்டிரீட் மாடலில் 18-இன்ச் அலுமினியம் ஸ்போக் வீல்கள், ஸ்லிப்பர் கிளட்ச், அசிஸ்ட், ஐந்து விதங்களில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கிளட்ச் லீவர், 4 விதங்களில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பிரேக் லீவர், ட்வின்-எக்சாஸ்ட் மற்றும் காம்பேக்ட் ஸ்விட்ச் கியர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    கவசாகி டபுள்யூ800 ஸ்டிரீட்: மெட்டாலிக் ஃபிளாட் ஸ்பார்க் பிளாக்/மெட்டாலிக் மேட் கிராஃபைட் கிரே நிறத்தில் கிடைக்கிறது. இதன் முன்பதிவு ஆன்லைன் மற்றும் கவாசகி விற்பனையகங்களில் நடைபெறுகிறது. இதன் விநியோகம் ஆகஸ்ட் மாதத்தில் துவங்கும் என தெரிகிறது.
    Next Story
    ×