search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    டிரையம்ப் டேடோனா மோட்டோ 2 765 லிமிட்டெட் எடிஷன்
    X
    டிரையம்ப் டேடோனா மோட்டோ 2 765 லிமிட்டெட் எடிஷன்

    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் லிமிட்டெட் எடிஷன்

    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது புதிய லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.



    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் டிரையம்ப் டேடோனா மோட்டோ2 765 லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிளை உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளது.

    இது மோட்டோ2 சீரிசை தழுவி உருவாக்கப்படுகிறது. புதிய சூப்பர்ஸ்போர்ட் பைக்: யூரோ-ஆசியா மற்றும் வட அமெரிக்கா என இருவித வெர்ஷன்களில் கிடைக்கும். புதிய டேடோனா மோட்டோ2 லிமிட்டெட் எடிஷன் 765சிசி இன்-லைன் 3-சிலிண்டர் என்ஜின் கொண்டிருக்கும் என தெரிகிறது. 

    லிமிட்டெட் எடிஷனில் டிரையம்ப் மொத்தமே 765 யூனிட்களையே உற்பத்தி செய்ய இருக்கிறது. 2020 டிரையம்ப் டேடோனா 765 இதுவரை வெளியான டேடோனா மாடல்களை விட அதிக திறன் கொண்டிருக்கும். இத்துடன் டேடோனா மோட்டோ2 டேடோனா 675 ஆர் மற்றும் டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபில் மாடல்களை விட அதிக செயல்திறன் வழங்கும் என டிரையம்ப் தெரிவித்துள்ளது.

    டேடோனா 765

    புதிய டேடோனா 765 பழைய டேடோனா 765ஆர் மாடலை விட எடை குறைவாக இருக்கும். ரேஸ்-டியூன் செய்யப்பட்ட மோட்டோ2 765 மாடல் 138 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் என தெரிகிறது. உற்பத்திக்கு தயாரான மோட்டார்சைக்கிள் ஆகஸ்ட் 23 ஆம் தேதி சில்வர்ஸ்டோனில் துவங்கும் ப்ரிடிஷ் ஜி.பி. விழாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

    புதிய மாடலில் ஃபுல் கலர் டி.எஃப்.டி. ஸ்கிரீன், ரோட், ரெயின், ஸ்போர்ட், ரைடர் மற்றும் டிராக் என ஐந்து ரைடிங் மோட்கள் வழங்கப்படுகிறது. புதிய டேடோனா 765 மாடலில் ஒலின்ஸ் ஃபோர்க் மற்றும் மோனோ ஷாக் வழங்கப்படுகிறது. இத்துடன் கார்னெரிங் ஏ.பி.எஸ்., கார்னெரிங் டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஸ்லைட் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.
    Next Story
    ×