என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
டெக்னோ எலெக்ட்ராவின் மூன்று புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்தியாவி்ல் அறிமுகம்
Byமாலை மலர்18 July 2019 8:05 AM GMT (Updated: 18 July 2019 8:05 AM GMT)
மும்பையை சேர்ந்த டெக்னோ எலெக்ட்ரா நிறுவனத்தின் மூன்று புதிய ஸ்கூட்டர்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.
மும்பையை சேர்ந்த ஸ்கூட்டர் ஸ்டார்ட்-அப் நிறுவனமான டெக்னோ எலெக்ட்ரா இந்தியாவில் மூன்று புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்தது.
புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்: நியோ, ரேப்டார் மற்றும் எமெர்ஜ் என அழைக்கப்படுகின்றன. இதில் நியோ மாடல் விலை ரூ. 42,000 (எக்ஸ்-ஷோரூம்), ரேப்டார் மற்றும் எமெர்ஜ் மாடல்களின் விலை முறையே ரூ. 60,771 (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் ரூ. 72,247 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
மூன்று புதிய ஸ்கூட்டர்களில் எமெர்ஜ் ஃபிளாக்ஷிப் மாடலாக இருக்கிறது. இது நியோ-ரெட்ரோ வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இதில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.சி.டி. டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், மொபைல் சார்ஜிங் யு.எஸ்.பி. போர்ட், ஃபார்வேர்டு, ரிவர்ஸ் மற்றும் நியூட்ரல் மோட்களுக்கு ஸ்விட்ச் வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் எமெர்ஜ் மாடலில் 48 வோல்ட் லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி 250 வோல்ட் BLDC மோட்டாருடன் வருகிறது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 70 முதல் 80 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் வழங்குகிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஆகும்.
டெக்னோ எலெக்ட்ரா எமெர்ஜ் மாடலின் சஸ்பென்ஷனுக்கு முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் டூயல் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் இந்த ஸ்கூட்டரின் முன்புறம் டிஸ்க் பிரேக், பின்புறம் டிரம் பிரேக்கள் வழங்கப்பட்டுள்ளன.
நியோ மற்ரும் ரேப்டார் மாடல்களில் கன்வெஷனல் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. டெக்னோ எலெக்ட்ரா ரேப்டார் மாடல் பார்க்க ஹோன்டா கிரேசியா போன்று காட்சியளிக்கிறது. இரு மாடல்களிலும் ஃபிளாக்ஷிப் எமெர்ஜ் மாடலை போன்று ஒரேவித அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
எனினும், ரேப்டார் மாடலில் லித்திம் அயன் ரக பேட்டரிக்கு மாற்றாக லெட்-ஆசிட் பேட்டரிகள் வழங்கப்பட்டுள்ளன. நியோ மாடலில் ஃபார்வேர்டு, ரிவர்ஸ் மற்றும் நியூட்ரல் மோட்களுக்கு பிரத்யேக ஸ்விட்ச் வழங்கப்படவில்லை.
நியோ மற்றும் ரேப்டார் மாடலில் 12 வோல்ட் 20AH லீட்-ஆசிட் பேட்டரி மற்றும் 250 வோல்ட் BLDC மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. நியோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 முதல் 65 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
டெக்னோ எலெக்ட்ரா ரேப்டார் மாடலை ஒருமுறை சார்ஜ் செய்தால் 75 முதல் 85 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. டெக்னோ எலெக்ட்ரா நியோ மற்றும் ரேப்டார் மாடல்களில் எமெர்ஜ் மாடலில் உள்ளதை போன்ற சஸ்பென்ஷன், பிரேக் மற்றும் கிரவுன்ட் கிளயரன்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X