search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    2019 சுசுகி அக்சஸ் 125 எஸ்.இ.
    X
    2019 சுசுகி அக்சஸ் 125 எஸ்.இ.

    இந்தியாவில் 2019 சுசுகி அக்சஸ் 125 எஸ்.இ. அறிமுகம்

    சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 2019 அக்சஸ் 125 எஸ்.இ. ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.



    சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் மேம்பட்ட அக்சஸ் 125 எஸ்.இ. ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. சுசுகி அக்சஸ் 125 ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டரின் விலை ரூ. 61,788 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர் டாப் எண்ட் டிஸ்க்-பிரேக் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. இது ஸ்டான்டர்டு டிஸ்க் வேரியண்ட் மாடலை விட ரூ. 1,600 விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மேம்பட்ட சுசுகி அக்சஸ் 125 எஸ்.இ. மாடலில் காஸ்மெடிக் மாற்றங்கள் மற்றும் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. காஸ்மெடிக மாற்றங்களை பொருத்தவரை: வட்ட வடிவம் கொண்ட க்ரோம் கண்ணாடிகள், க்ரோம் பிளேட் செய்யப்பட்ட ஃபினிஷ், மேம்பட்ட பாடிவொர்க், முற்றிலும் கருப்பு நிறம் கொண்ட அலாய் வீல்கள், பெய்க் நிறத்தாலான லெதர் சீட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    2019 சுசுகி அக்சஸ் 125 எஸ்.இ.

    இத்துடன் புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர் மெட்டாலிக் மேட் போர்டௌக்ஸ் எனும் புதிய நிறத்திலும் கிடைக்கிறது. இதில் கூடுதல் அம்சங்களாக: போன் சார்ஜ் செய்ய டி.சி. சாக்கெட், நீண்ட சீட் மற்றும் பெரிய டேஷ்போர்டு, டிஜிட்டல் மீட்டர், பெரிய அன்டர்-சீட் ஸ்டோரேஜ் மற்றும் அழகிய AHO ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய அக்சஸ் 125 எஸ்.இ. மாடலில் 124சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 8.7 பி.ஹெச்.பி. @7000 ஆர்.பி.எம் மற்றும் 10.2 என்.எம். டார்க் @5000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் புதிய ஸ்கூட்டரில் SEP தொழில்நுட்பம், ஒன்-புஷ் ஈசி-ஸ்டார்ட் சிஸ்டம், சென்ட்ரல் லாக்கிங் மற்றும் இன்-பில்ட் செக்யூரிட்டி சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    அக்சஸ் 125 எஸ்.இ. புதிய நிறம் தவிர மெட்டாலிக் மேட் பிளைக், மெட்டாலிக் சோனிக் சில்வர் மற்றும் பியல் மிரேஜ் வைட் போன்ற நிறங்களிலும் கிடைக்கிறது.
    Next Story
    ×