search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    டுகாட்டி பனிகேல் வி4 25 அனிவர்சரியோ 916
    X
    டுகாட்டி பனிகேல் வி4 25 அனிவர்சரியோ 916

    ரூ. 54.90 லட்சம் விலையில் புதிய மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்

    டுகாட்டி நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிள் இந்தியாவில் ரூ. 54.90 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.



    டுகாட்டி நிறுவனம் தனது பனிகேல் வி4 மோட்டார்சைக்கிளின் ஸ்பெஷல் எடிஷன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

    டுகாட்டி பனிகேல் வி4 25 அனிவர்சரியோ 916 என அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ. 54.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் உலகம் முழுக்க வெறும் 500 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றில் அதிகளவு காஸ்மெடிக் மற்றும் மெக்கானிக்கல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    டுகாட்டி 916 ரக மோட்டார்சைக்கிள்களின் 25 ஆண்டு கொண்டாட்டத்தை குறிப்பிடும் வகையில் புதிய ஸ்பெஷல் எடிஷன் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மோட்டார்சைக்கிள் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் அறிமுகமாகி இருக்கும் புதிய மோட்டார்சைக்கிள் டுகாட்டி நிறுவனத்தின் விலை உயர்ந்த மாடலாக இருக்கிறது.

    டுகாட்டி பனிகேல் வி4 25 அனிவர்சரியோ 916

    முன்னதாக டுகாட்டி வி4 ஸ்பெஷல் மற்றும் வி4 ஆர் வெர்ஷன்கள் ரூ. 51.81 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் ரூ. 51.87 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் டுகாட்டி நிறுவனத்தின் விலை உயர்ந்த மாடல்களாக இருந்தன. 

    அனிவர்சரியோ 916 எடிஷனில் 1,103சிசி வி4 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 214 பி.ஹெச்.பி. மற்றும் 124 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் டிராக்-ஃபோகஸ் செய்யப்பட்ட வி4 ஆர் மாடலில் இருந்து சில உபகரணங்கள் புதிய மாடலில் வழங்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் ஸ்போர்ட் ஃபிரேம், டிரை கிளட்ச், டிராக்-ஸ்பெசிஃபிக் எலெக்டிரானிக்ஸ், டிராக்‌ஷன் கண்டரோல் சிஸ்டம், க்விக் ஷிஃப்டர் சிஸ்டம் உள்ளிட்டவை புதிய மாடலில் வழங்கப்பட்டுள்ளன.
    Next Story
    ×