search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    டி.வி.எஸ். அபாச்சி ஆர்.டி.ஆர். 200 4வி எத்தனால்
    X
    டி.வி.எஸ். அபாச்சி ஆர்.டி.ஆர். 200 4வி எத்தனால்

    இந்தியாவில் அபாச்சி ஆர்.டி.ஆர். 200 4வி எத்தனால் அறிமுகம்

    எத்தனால் மூலம் இயங்கும் தனது முதல் மோட்டார்சைக்கிளை டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது.



    டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் எத்தனால் மூலம் இயங்கும் தனது முதல் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. எத்தனால் மூலம் இயங்கும் அபாச்சி ஆர்.டி.ஆர். 200 4வி FI E100 விலை ரூ. 1.2 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக டி.வி.எஸ். அபாச்சி ஆர்.சி.ஆர். 200 4வி FI E100 எத்தனால் மோட்டார்சைக்கிள் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் இந்த மாடல் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. புதிய எத்தனால் மூலம் இயங்கும் மோட்டார்சைக்கிள் படிப்படியாக விற்பனை செய்யப்படுகிறது.

    முதற்கட்டமாக உத்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இதன் விற்பனை துவங்குகிறது. அதன்பின் மற்ற மாநிலங்களில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. எத்தனால் வேரியண்ட் மாடலில் பச்சை நிற டீக்கல்கள் வழங்கப்பட்டுள்ளது. இது மோட்டார்சைக்கிளின் மற்ற மாடல்களை விட வித்தியாசப்படுத்துகிறது.

    டி.வி.எஸ். அபாச்சி ஆர்.டி.ஆர். 200 4வி எத்தனால்

    டி.வி.எஸ். அபாச்சி ஆர்.டி.ஆர். 200 F1 எத்தனால் மாடலில் E100 200சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 20.7 பி.ஹெச்.பி. பவர் @8500 ஆர்.பி.எம். மற்றும் 18.1 என்.எம். டார்க் @7000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இது 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வருகிறது.

    எத்தனால் மூலம் இயங்கும் அபாச்சி ஆர்.டி.ஆர். 200 4வி மாடலும் மணிக்கு அதிகபட்சம் 129 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருப்பதாக டி.வி.எஸ். மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. எத்தனால் மூலம் இயங்கும் ஆர்.டி.ஆர். 200 மாடலில் எலெக்டிரானிக் ஃபியூயல்-இன்ஜெக்‌ஷன் சிஸ்டம். ட்வின்-ஸ்பிரே-ட்வின்-போர்ட் உடன் வருகிறது. இது அதிக செயல்திறன் வழங்க உதவுகிறது.

    வழக்கமான பெட்ரோல் மற்ரும் டீசல் எரிபொருட்களுடன் ஒப்பிடும் போது எத்தனால் குறைந்த அளவு மாசு ஏற்படுத்தும் தன்மை கொண்டிருக்கிறது. இது காற்றில் 35 சதவிகிதம் வரை குறைந்த கார்பன் மோனோ ஆக்சைடை வெளியேற்றுகிறது.
    Next Story
    ×