search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஹோண்டா ஜீனியோ
    X
    ஹோண்டா ஜீனியோ

    அசத்தல் அம்சங்களுடன் ஹோண்டா ஜீனியோ அறிமுகம்

    ஹோண்டா நிறுவனத்தின் ஜீனியோ ஸ்கூட்டர் அசத்தல் அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



    இருசக்கர வாகன தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜப்பானின் ஹோண்டா நிறுவனம் தற்போது ஜீனியோ என்ற பெயரில் புதிய ஸ்கூட்டரை வடிவமைத்துள்ளது. இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில் மிகவும் அட்டகாசமான வடிவமைப்பில் கம்பீரமான தோற்றத்துடன் இது இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

    செயல் திறன், உறுதியான மேல் பாகம், சொகுசான பயணம், அதிக மைலேஜ் என அனைத்திலும் சிறப்பானதாக விளங்குகிறது. இதில் இ.எஸ்.பி. என்ஜின் உள்ளது. 110 சி.சி. திறன் கொண்ட, அதிக மைலேஜ் தரும் வகையில் சிறப்பான செயல்பாடுகளைக் கொண்டதாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

    வாகனம் ஓட்டுபவருக்கு மிகச் சிறந்த ஸ்திரத்தன்மையை அளிக்கும் வகையில் இதன் இருக்கை 740 மி.மீ. உயரத்தில் உள்ளது. அத்துடன் கால்களை மிகச் சவுகரியமாக வைத்து பயணிக்கும் வகையில் இதில் இட வசதியும் உள்ளது. இதன் முகப்பில் எல்.இ.டி. விளக்கு உள்ளது. அதேபோல மிகவும் அழகான தோற்றம் உடைய பின்புற விளக்கு உள்ளது. இதன் விளக்கு வெளிச்சம் மிகத் துல்லியமாக, தொலைவில் வரும் வாகனங்களுக்குத் தெரியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 

    ஹோண்டா ஜீனியோ

    இதில் உள்ள டிஜிட்டல் மீட்டர் பல்வேறு தகவல்களைக் கொண்டது. வாகனத்தின் வேகத்தை உணர்த்த ஸ்பீடா மீட்டர், ஓடோமீட்டர், எரிபொருள் அளவை உணர்த்தும் வசதி, இன்டிகேட்டர் ஆகியவற்றை ஓட்டுபவர் தெரிந்துகொள்ளும் வகையில் கனகச்சிதமாக பொருத்தப்பட்டுள்ளது.

    பின்னால் அமருபவரின் வசதிக்காக அலுமினியத்தால் ஆன கைப்பிடி வாகனத்துக்கு பிரீமியம் தோற்றத்தை அளிக்கிறது. சீட்டுக்கு அடிப்பகுதியில் அதிக இடவசதி உள்ளது. இதன் மூலம் அன்றாட தேவைக்கான பொருட்களை மிகவும் கச்சிதமாக வைக்க முடியும். லக்கேஜ் பாக்ஸிலேயே சார்ஜிங் வசதி இருப்பதால், மொபைல் போனை பாதுகாப்பாக சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

    இது யூரோ 3 புகை விதி சோதனைக்குட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் பாரத் 6 புகைவிதிக்கு இது முற்றிலும் பொருந்தக் கூடியது. இதனால் இந்தியாவில் அறிமுகமாகும்போது இதில் மாற்றங்கள் செய்யவேண்டி இருக்காது. இந்தோனேசியாவைத் தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் ஜீனியோ அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.
    Next Story
    ×