search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    பஜாஜ் வி15
    X
    பஜாஜ் வி15

    ஜூன் மாதத்தில் பஜாஜ் ஆட்டோ வாகன விற்பனை விவரம்

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஜூன் மாத வாகன விற்பனை விவரங்கள் வெளியாகியுள்ளது.



    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஜூன் மாதத்தில் மட்டும் மொத்தம் 4.04 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 4.03 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தது. 

    உள்நாட்டில் இந்நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை 2 சதவீதம் குறைந்து 2.29 லட்சமாக இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மொத்தம் 2.34 லட்சம் வாகனங்களை விற்பனை செய்திருந்தது.

    பஜாஜ் பிளாட்டினா

    இந்நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்கள் விற்பனை 4 சதவீதம் அதிகரித்து 3.51 லட்சமாக உயர்ந்துள்ளது. மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை 20 சதவீதம் குறைந்து 53,333-ஆக இருக்கிறது.

    ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் இந்நிறுவனம் 12.47 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 2 சதவீதம் உயர்வாகும். இதே காலத்தில் அதன் ஏற்றுமதி 2 சதவீதம் அதிகரித்துள்ளது.
    Next Story
    ×