என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
இந்தியாவில் சில்வர் நிறத்தாலான லிமிட்டெட் எடிஷன் கவாசகி நின்ஜா மோட்டார்சைக்கிள் அறிமுகம்
Byமாலை மலர்4 July 2019 10:22 AM GMT (Updated: 4 July 2019 10:22 AM GMT)
இந்தியாவில் கவாசகி நிறுவனம் 2019 நின்ஜா 1000 சிசி மோட்டார்சைக்கிளின் சில்வர் நிற லிமிட்டெட் எடிஷன் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது.
கவாசகி நிறுவனம் 2019 நின்ஜா 1000 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் சமீபத்தில் வெளியிட்டது. இந்நிலையில், புதிய 1000 சிசி மோட்டார்சைக்கிளை புதிதாக மெட்டாலிக் மேட் ஃபியூஷன் சில்வர் எனும் நிறத்தில் அறிமுகம் செய்துள்ளது. இது லிமிட்டெட் எடிஷன் மாடலாக வெளியிடப்பட்டுள்ளது.
இதனால் புதிய நிறம் கொண்ட நின்ஜா 1000 மாடல் வெறும் 60 யூனிட்களே உருவாக்கப்படுகின்றன. நின்ஜா தோற்றம் முந்தைய மாடலை போன்றே காட்சியளித்தாலும், புதிய டீக்கல்கள் மற்றும் சிறிய கிராஃபிக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய மாடலின் விலையே புதிய மாடலிலும் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதால், இதன் மெக்கானிக்கல் அம்சங்களில் மாற்றம் செய்யப்படாதுது. பூனே அருகில் இருக்கும் கவாசகியின் சக்கன் தயாரிப்பு ஆலையில் புதிய நின்ஜா 1000 மோட்டார்சைக்கிள் கட்டமைக்கப்படுகிறது.
புதிய மோட்டார்சைக்கிளில் 1043சிசி இன்லைன் 4-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் 141.9 பிஎஸ் @10000 ஆர்பிஎம் மற்றும் 111என்எம் டார்கியூ @7300 ஆர்பிஎம் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் புதிய மாடலில் ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச், ஏபிஎஸ் மற்று் 3-லெவல் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
பிளாக் மற்றும் கிரீன் என இரண்டு நிறங்ககளில் கிடைக்கும் 2019 கவாசகி நின்ஜா 1000 முன்பதிவு இந்தியா முழுக்க துவங்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் 2019 கவாசகி நின்ஜா 1000 மெட்டாலிக் மேட் ஃபியூஷன் சில்வர் நிற மாடலின் விலை ரூ.10.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Next Story
×