search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    டி.வி.எஸ். என்டார்க்
    X
    டி.வி.எஸ். என்டார்க்

    இந்தியாவில் டி.வி.எஸ். மோட்டார் விற்பனை சரிவு

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை 11 சதவிகிதம் சரிவை சந்தித்துள்ளது.



    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை 11 சதவிகிதம் சரிவடைந்துள்ளது. 

    மே மாதம் மட்டும் டி.வி.எஸ். நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை 3.13 லட்சத்தில் இருந்து 2.79 லட்சமாக குறைந்து இருக்கிறது. இதில் இருசக்கர வாகனங்கள் விற்பனை 6 சதவிகிதம் குறைந்து 2.83 லட்சமாக இருக்கிறது. 

    டி.வி.எஸ். என்டார்க்

    கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அது 3.01 லட்சம் வாகனங்களாக இருந்தது. உள்நாட்டில் இந்நிறுவனத்தின் விற்பனை 8 சதவிகிதம் குறைந்து 2.26 லட்சம் வாகனங்களாக உள்ளது. இதில் ஸ்கூட்டர் விற்பனை 3.65 சதவிகிதம் குறைந்து 99,007-ஆக உள்ளது.

    மோட்டார்சைக்கிள் விற்பனை 2 சதவிகிதம் உயர்ந்து 1.31 லட்சமாக அதிகரித்து இருக்கிறது. மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை 10 சதவீதம் உயர்ந்து (12,413-ல் இருந்து) 13,641-ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த அளவில் ஏற்றுமதி 6 சதவிகிதம் அதிகரித்து (65,971-ல் இருந்து) 69,900-ஆக உயர்ந்துள்ளது. இதில் இரு சக்கர வாகனங்கள் ஏற்றுமதி 4 சதவீதம் உயர்ந்து 57,182-ஆக இருக்கிறது.
    Next Story
    ×