search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ராயல் என்ஃபீல்டு லோகோ
    X
    ராயல் என்ஃபீல்டு லோகோ

    ராயல் என்ஃபீ்டு நிறுவனத்தின் 250சிசி மோட்டார்சைக்கிள்

    ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்திய சந்தைக்கென புதிதாக 250சிசி மோட்டார்சைக்கிள் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



    ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய புதிய மோட்டார்சைக்கிளை உருவாக்கி வருகிறது. புதிய மோட்டார்சைக்கிள் 250சிசி திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ராயல் என்ஃபீல்டு 250சிசி மோட்டார்சைக்கிளின் துவக்கக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இதன் அறிமுகத்திற்கு சிலகாலம் ஆகும் என கூறப்படுகிறது.

    இந்திய சந்தையில் ராயல் என்ஃபீல்டு நிறுவன விற்பனை சரிந்து வருவதால், புதிதாக 250சிசி வாகனம் அறிமுகம் செய்வதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதிய 250 சிசி வாகனம் இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கவரும் என அந்நிறுவனம் நம்புகிறது.

    ராயல் என்ஃபீல்டு பைக் - கோப்புப்படம்

    புதிய மோட்டார்சைக்கிள் மூலம் இந்திய சந்தையில் தனது வாகனங்களின் விலையை குறைக்க இருக்கிறது. சந்தையில் அதிக போட்டி ஏற்பட்டுள்ளதால் ராயல் என்ஃபீல்டு விற்பனை குறைந்திருக்கிறது. இந்த ஆண்டு துவக்கம் முதலே ராயல் என்ஃபீல்டு விற்பனை சரிவை சந்தித்து வருகிறது.

    கடந்த சில ஆண்டுகளில் ஒப்பிடும் போது இந்திய சந்தையில் ராயல் என்ஃபீல்டு விற்பனை குறைந்திருப்பது இதுவே முதல் முறையாகும். தற்சமயம் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 350சிசி பிரிவில் கிளாசிக், புல்லெட் மற்றும் தண்டர்பேர்டு போன்ற வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.

    350சிசி பிரிவு தவிர, ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 650சிசி பிரிவில் இன்டர்செப்டார் மற்றும் கான்டினென்டல் ஜி.டி. மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இவற்றின் விலை ரூ. 2.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×