search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    2019 பி.எம்.டபுள்யூ. எஸ் 1000 ஆர்.ஆர்.
    X
    2019 பி.எம்.டபுள்யூ. எஸ் 1000 ஆர்.ஆர்.

    இந்தியாவில் 2019 பி.எம்.டபுள்யூ. எஸ் 1000 ஆர்.ஆர். அறிமுகம்

    பி.எம்.டபுள்யூ. மோட்டராட் நிறுவனம் இந்தியாவில் 2019 எஸ் 1000 ஆபர்.ஆர். மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.



    பி.எம்.டபுள்யூ. மோட்டராட் நிறுவனத்தின் 2019 எஸ் 1000 ஆர்.ஆர். மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 2019 பி.எம்.டபுள்யூ. எஸ் 1000 ஆர்.ஆர். மோட்டார்சைக்கிள்: ஸ்டான்டர்டு, ப்ரோ மற்றும் ப்ரோ எம் ஸ்போர்ட் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    இதன் ஸ்டான்டர்டு வேரியண்ட் விலை ரூ. 18.50 லட்சம், ப்ரோ வேரியண்ட் விலை ரூ. 20.95 லட்சம் மற்றும் டாப் எண்ட் ப்ரோ எம் ஸ்போர்ட் மாடல் விலை ரூ. 22.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய 2019 பி.எம்.டபுள்யூ. எஸ். 1000 ஆர்.ஆர். மோட்டார்சைக்கிள் முன்பதிவு துவங்கியுள்ளது. இதன் வநியோகம் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பி.எம்.டபுள்யூ. மோட்டார்சைக்கிள் முற்றிலும் புதிய வடிவமைப்பு, ரிவைஸ்டு என்ஜின் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்கள் கொண்டிருக்கிறது.

    2019 பி.எம்.டபுள்யூ. எஸ் 1000 ஆர்.ஆர்.

    2019 பி.எம்.டபுள்யூ. எஸ். 1000 ஆர்.ஆர். மாடலில் 999சிசி இன்-லைன் 4-சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 207 பி.ஹெச்.பி. @13500 ஆர்.பி.எம். மற்றும் 113 என்.எம். டார்க் @11000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இது முந்தைய மாடலை விட 8 பி.ஹெச்.பி. வரை அதிகம் ஆகும்.

    புதிய பி.எம்.டபுள்யூ. மோட்டார்சைக்கிளில் 6ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் பை-டைரெக்‌ஷனல் க்விக் ஷிஃப்டர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 2019 பி.எம்.டபுள்யூ. எஸ். 1000 ஆர்.ஆர். மோட்டார்சைக்கிள் முந்தைய மாடலை விட 11 கிலோ குறைவாக இருக்கிறது.
    Next Story
    ×