search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    சென்னையில் 18 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமிக்கும் ராயல் என்ஃபீல்டு
    X

    சென்னையில் 18 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமிக்கும் ராயல் என்ஃபீல்டு

    ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது வாகனங்களை சுத்தம் செய்ய புதிய வழிமுறையை பின்பற்றி சென்னையில் 18 லட்சம் தண்ணீரை சேமிக்கிறது.



    சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தன்பங்கிற்கு தண்ணீரை சேமிக்கும் முயற்சிகளில ஈடுபட துவங்கியுள்ளன. மோட்டார்சைக்கிள்களை சுத்தம் செய்ய தண்ணீர் பயன்பாட்டை குறைக்கும் வகையில், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சென்னை முழுக்க 20 சர்வீஸ் மையங்களில் டிரை வாஷ் சிஸ்டம்களை பயன்படுத்தி வருகிறது.

    இவ்வாறு புதிய முறையை பயன்படுத்தியதில் மாதம் 18 லட்சம் தண்ணீரை சேமிக்க முடிவதாக ராயல் என்ஃபீல்டு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் சென்னை நகர தண்ணீர் தேவை 80 கோடி லிட்டர்களாக இருககிறது. எனினும், சென்னையில் மாதம் 52.5 கோடி லிட்டர் தண்ணீர் தான் கிடைக்கிறது.



    இந்நிலையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலிலும், வாடிக்கையாளர் சேவையை தொடர்ந்து சிறப்பாக வழங்க ராயல் என்ஃபீல்டு முதல் முறையாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 

    ராயல் என்ஃபீல்டு பின்பற்றும் புதிய டிரை வாஷ் சிஸ்டம் மிகக்குறைந்த அளவு தண்ணீர் கொண்டு சிறப்பாக சுத்தம் செய்திட முடியும். இவ்வாறு செய்யும் போது வழக்கம்போல வாகனம் பிரகாசமாக காட்சியளிக்கும்.
    Next Story
    ×