search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    கிம்கோவின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்
    X

    கிம்கோவின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்

    தைவானை சேர்ந்த கிம்கோ நிறுவனம் இந்தியாவில் பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்தது.



    தைவானைச் சேர்ந்த கிம்கோ நிறுவனம் இந்தியாவில் பிரீமியம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அறிமுகம் செய்தது. இந்நிறுவனம் கடந்த ஆண்டு இந்தியாவில் செயல்படும் 22 மோட்டார்ஸ் எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் 25 சதவீதம் முதலீடு செய்தது. 

    இதன் மூலம் பேட்டரி ஸ்கூட்டர் உருவாக்கத்தில் பிரதான பங்கு வகிக்கும் ஐயோனெக்ஸ் பேட்டரி தொழில்நுட்பத்தை இந்திய நிறுவனத்துக்கு கிம்கோ அளித்துள்ளது. இந்த ஸ்கூட்டரில் உள்ள லித்தியம் அயன் பேட்டரி மாற்றக்கூடிய வகையிலும் எடை குறைவாகவும் இருப்பது இதன் சிறப்பம்சமாகும். 5 கிலோ எடையுள்ள இந்த பேட்டரி ஒருமணி நேரத்திற்குள் முழுவதுமாக சார்ஜ் ஆகிவிடும்.

    ‘ஐ புளோ’ எனும் பெயரில் பேசிக் மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 90,000 ஆகும். இந்த மாடல் ஸ்கூட்டர்கள் கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த ஸ்கூட்டரில் அதிநவீன சிறப்பம்சங்களான எல்.இ.டி. விளக்கு, எல்.இ.டி. பின்புற விளக்கு, டர்ன் இன்டிகேட்டர்ஸ் ஆகியன உள்ளன.

    டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் டிஸ்ப்ளே வசதியானது புளூடூத் இணைப்பைக் கொண்டது. இத்துடன் கிளவுட் இணைப்பு தொழில்நுட்பமும் இந்த ஸ்கூட்டரில் இருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும். இதில் ஜியோ ஃபென்சிங் வசதி இருப்பதால், ஸ்கூட்டர் எங்குள்ளது என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியும்.



    இருக்கையின் (சீட்) அடிப்பகுதியில் 2 சிறிய ஹெல்மெட்டை வைக்கும் அளவுக்கு இடவசதி உண்டு. ரோக் மேட் புளூ, கோடுர் பிரவுன், ஃபியூரி ரெட், ரெய்சின் பிளாக், மூன்லைட் சில்வர் மற்றும் வைட் டவ் என ஆறுவித நிறங்களில் இது கிடைக்கிறது. இந்த வாகனத்தில் இரண்டு பேட்டரிகளை வைக்கும் இடவசதி உள்ளது. இரண்டு சார்ஜ் ஏற்றிய பேட்டரி இருந்தால் 160 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம். 

    இந்நிறுவனமே குறைந்த கட்டணத்தில் பேட்டரிகளை நிர்வகிக்கும் வசதியை அளிக்கிறது. அதன்படி சார்ஜ் ஏற்றிய பேட்டரியை மாற்றிச் செல்லலாம். இதற்கு மாதம் ரூ.1,000 அல்லது ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்விதம் ஸ்பேர் பேட்டரிகளை அளிக்கும் மையங்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்கும் நடவடிக்கையிலும் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

    முதற்கட்டமாக டெல்லி, பெங்களூரு, புனே, ஐதராபாத், கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில் 2.1 கிலோவாட் மோட்டார் உள்ளது. இதனால் அதிகபட்சமாக மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் பயணிக்க முடியும். பின் சக்கரத்துக்கு டிஸ்க் பிரேக் வசதி தரப்பட்டுள்ளது. 12 அங்குல சக்கரத்துக்கு டியூப்லெஸ் டயர்கள் உள்ளன. 

    கிம்கோ நிறுவனம் அரியானா மாநிலம் பிவாடி எனுமிடத்தில் ஆலையை அமைத்து உற்பத்தியை தொடங்கியுள்ளது. இந்த ஆலை ஆண்டுக்கு 2 லட்சம் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும். நாடு முழுவதும் 300 விற்பனை நிலையங்கள் மூலம் தயாரிப்புகளை சந்தைப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
    Next Story
    ×