search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    இந்தியாவில் கே.டி.எம். ஆர்.சி. 125 விற்பனை துவங்கியது
    X

    இந்தியாவில் கே.டி.எம். ஆர்.சி. 125 விற்பனை துவங்கியது

    கே.டி.எம். இந்தியா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆர்.சி. 125 மோட்டார்சைக்கிள் விற்பனை துவங்கியுள்ளது.



    கே.டி.எம். இந்தியா நிறுவனத்தின் புதிய ஆர்.சி. 125 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1.47 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது அந்நிறுவனத்தின் கே.டி.எம். 125 மாடலை விட ரூ. 17,000 வரை அதிகமாகும்.

    இந்தியாவில் கிடைக்கும் குறைந்த திறன் கொண்ட ஃபுல்லி-ஃபேர்டு மோட்டார்சைக்கிளாக கே.டி.எம். ஆர்.சி. 125 இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் இந்தியாவில் யமஹா YZF-R15 மாடலுக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது. யமஹா YZF R15 மாடலை விட கே.டி.எம். ஆர்.சி. 125 விலை ரூ. 8,000 வரை அதிகமாகும்.



    கே.டி.எம். ஆர்.சி. 125 மாடலில் 125சிசி, லிக்விட்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் கொண்டிருக்கிறது. இதே என்ஜின் டியூக் 125 மாடலிலும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த என்ஜின் 14.5 பி.எஸ். திறன் மற்றும் 12 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.

    புதிய ஆர்.சி. 125 மாடலில் சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ். கொண்டிருக்கிறது. இத்துடன் மோட்டார்சைக்கிளின் முன்புறம் 43 எம்.எம். அப்சைடு டவுன் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது. இதன் ஃபியூயல் டேன்க் 9.5 லிட்டர் கொள்ளலவு கொண்டிருக்கிறது.
    Next Story
    ×