search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    2019 பி.எம்.டபுள்யூ. எஸ் 10000 ஆர்.ஆர். வெளியீட்டு விவரம்
    X

    2019 பி.எம்.டபுள்யூ. எஸ் 10000 ஆர்.ஆர். வெளியீட்டு விவரம்

    பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் புதிய 2019 எஸ் 1000 ஆர்.ஆர். மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
    பி.எம்.டபுள்யூ. நிறுவனம் தனது 2019 எஸ் 1000 ஆர்.ஆர். மோட்டார்சைக்கிள் ஜூன் 27 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவித்துள்ளது.

    புதிய ஃபிளாக்‌ஷிப் மோட்டார்சைக்கிள் முந்தைய மாடலை விட எடை குறைவாகவும், அதிக செயல்திறன் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. விலையை பொருத்தவரை புதிய மோட்டார்சைக்கிள் விலை அதன் முந்தைய மாடலை விட ரூ.2.5 லட்சம் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம்.



    இந்தியாவில் 2019 எஸ் 1000 ஆர்.ஆர். பேஸ் மாடல் விலை ரூ.20.5 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மோட்டார்சைக்கிளில் ட்வின் சிமெட்ரிக்கல் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், மிரர் மவுன்ட் செய்யப்பட்ட எல்.இ.டி. டர்ன் இன்டிகேட்டர்கள், எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் வழங்கப்படுகிறது.

    இத்துடன் 6.5 இன்ச் கலர் டி.எஃப்.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வழங்கப்படுகிறது. இதே போன்ற கன்சோல் எஃப் 850 ஜி.எஸ். மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இதில் ப்ளூடூத் மற்றும் நேவிகேஷன் வசதியும் இருக்கிறது. செயல்திறனை பொருத்தவரை 2019 எஸ் 1000 ஆர்.ஆர். மாடலில் 999சிசி இன்-லைன் 4 மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த என்ஜின் 205 பி.எஸ். @13,000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இது முந்தைய மாடலை விட 6 பி.எஸ். அதிகம் ஆகும். இதன் அதிகபட்ச டார்க் 113 என்.எம். @10,500 ஆர்.பி.எம். ஆகும். இதன் எடை முந்தைய மாடலை விட 14.5 கிலோ வரை குறைவு என்பதால், இதன் செயல்திறன் அதிகமாக இருக்கும்.


    2019 பி.எம்.டபுள்யூ. எஸ் 1000 ஆர்.ஆர். மாடலில் ரெயின், ரோட், டைனமிக் மற்றும் ரேஸ் என நான்குவித டிரைவிங் மோட்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் 6-ஆக்சிஸ் IMU வழங்கப்படுகிறது. இது டைனமிக் டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட். என்ஜின் பிரேக் கண்ட்ரோல் மற்றும் ஷிஃப்ட் அசிஸ்ட் ப்ரோ போன்ற வசதிகளை இயக்குகிறது.

    இந்தியாவில் 2019 பி.எம்.டபுள்யூ. எஸ் 1000 ஆர்.ஆர். மாடல் கவாசகி நின்ஜா ZX-10R, யமஹா ஆர்1, ஹோன்டா சி.பி.ஆர்.1000ஆர்.ஆர்., டுகாடி பேனிகேல் வி4 மற்றும் அப்ரிலியா ஆர்.எஸ்.வி. 4 போன்ற பைக்குகளுக்கு போட்டியாக இருக்கும்.
    Next Story
    ×