search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    2021 வால்வோ எஸ்60
    X
    2021 வால்வோ எஸ்60

    2021 வால்வோ எஸ்60 வினியோக விவரம்

    வால்வோ நிறுவனம் தனது புதிய எஸ்60 மாடலின் வினியோகத்தை இந்த தேதியில் துவங்குவதாக தெரிவித்து இருக்கிறது.


    வால்வோ நிறுவனம் தனது எஸ்60 மாடலை ஜனவரி 2021 வாக்கில் இந்திய  சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய எஸ்60 மாடல் துவக்க விலை ரூ. 45.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது. முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சம் ஆகும்.

    இந்த நிலையில், புதிய வால்வோ எஸ்60 மாடலை மார்ச் 18 ஆம் தேதி முதல் வினியோகம் செய்வதாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. புதிய வால்வோ எஸ்60 அந்நிறுவனத்தின் சமீபத்திய வடிவமைப்பில் உருவாகி இருக்கிறது. இதில் அகலமான கிரில், நடுவில் வால்வோ லோகோ இடம்பெற்று இருக்கிறது. பக்கவாட்டுகளில் மெல்லிய எல்இடி தார் ஹேமர் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டு உள்ளது.

     2021 வால்வோ எஸ்60

    முன்புற பம்ப்பரில் பெரிய ஏர் இன்டேக் வழங்கப்பட்டு உள்ளது. பக்கவாட்டில் குறைந்த அளவு வடிவமைப்பு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் பெரிய டூயல்-டோன் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. பின்புறம் சி வடிவ எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    2021 வால்வோ எஸ்60 செடான் மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 187 பிஹெச்பி பவர், 300 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. தற்சமயம் இந்த மாடலில் டீசல் என்ஜின் வழங்கப்படவில்லை.
    Next Story
    ×