search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    டியூக் 200
    X
    டியூக் 200

    மேம்பட்ட அம்சங்களுடன் உருவாகும் இரண்டாம் தலைமுறை டியூக் 200

    கே.டி.எம். நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை டியூக் 200 மோட்டார்சைக்கிள் மேம்பட்ட அம்சங்களுடன் உருவாகி வருகிறது.



    கே.டி.எம். 200 டியூக் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் 2012 ஆம் ஆண்டு சிறிய திறன் கொண்ட ஸ்டிரீட் நேக்கட் மோட்டார்சைக்கிள் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் இந்த மோட்டார்சைக்கிள் சிறு சிறு அப்டேட்களை பெற்றது. அந்த வகையில் 200 டியூக் மோட்டார்சைக்கிள் விரைவில் பெரியளவில் அப்டேட் செய்யப்பட இருக்கிறது.

    இரண்டாம் தலைமுறை 200 டியூக் மாடல் ரிவைஸ்டு சேசிஸ் மற்றும் 250 டியூக் பிளாட்ஃபார்மில் உருவாகும் என தெரிகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் 200 டியூக் மாடலிலும் போல்ட்-ஆன் சப்ஃபிரேம் பெறும். இதன் தோற்றம் 790, 390 மற்றும் 250 மாடல்களை தழுவி உருவாகலாம் என்றும் 200 டியூக் மாடலில் பெரிய பெட்ரோல் டேன்க் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

    டியூக் 200

    மெக்கானிக்கல் அம்சங்களின் படி 200 டியூக் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் கொண்டிருக்கும் என தெரிகிறது. இத்துடன் ரைடு-பை-வையர், டி.எஃப்.டி. ஸ்கிரீன் மற்றும் சூப்பர்மோட்டோ ஏ.பி.எஸ். போன்ற வசதிகள் புதிய 200 டியூக் மாடலில் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

    புதிய அம்சங்கள் கொண்ட 200 டியூக் மாடலின் விலை ரூ. 1.70 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. தற்சமயம் கே.டி.எம். 200 டியூக் விலை ரூ. 1.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் பஜாஜ் பல்சர் என்.எஸ். 200 மற்றும் டி.வி.எஸ். அபாச்சி ஆர்.டி.ஆர். 200 4வி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.
    Next Story
    ×