search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஹூன்டாய் எலான்ட்ரா
    X
    ஹூன்டாய் எலான்ட்ரா

    அசத்தல் அம்சங்களுடன் அப்டேட் ஆகும் ஹூன்டாய் எலான்ட்ரா

    ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் கார் அசத்தல் அம்சங்களுடன் அப்டேட் செய்யப்படுகிறது.



    ஹூன்டாய் தயாரிப்புகளில் எலான்ட்ரா மாடலுக்கு மிகுந்த மதிப்பு உண்டு. செடான் மாடல் காரான இது இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்ற மாடலாகத் திகழ்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதமே எலான்ட்ரா மாடலில் மேம்படுத்தப்பட்ட ரகத்தை அறிமுகப்படுத்தப் போவதாக இந்நிறுவனம் அறிவித்தது. 

    ஆனால் அதற்குப்பிறகு பல்வேறு புதிய மாடல்களை அறிமுகப்படுத்திய ஹூன்டாய் நிறுவனம் இம்மாத இறுதியில் மேம்படுத்தப்பட்ட எலான்ட்ரா மாடலை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்து இருக்கிறது. இப்போது பெட்ரோல் மாடலில் மட்டுமே மேம்படுத்தப்பட்ட ரகம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    ஹூன்டாய் எலான்ட்ரா

    புதிய எலான்ட்ரா பாரத் 6 புகைவிதி சோதனைகளை பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 2 லிட்டர் என்ஜினைக் கொண்ட இந்த மாடல் 152 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தக் கூடியது. இதில் மானுவல் ஸ்பீடு மாடலும், ஆட்டோ டிரான்ஸ்மிஷன் மாடலும் வெளிவருகிறது. டீசல் மாடலை படிப்படியாகக் கைவிட நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    இதனால் மேம்படுத்தப்பட்ட மாடலில் டீசல் மாடல் காரை நிறுவனம் தயாரிக்கவில்லை. இந்தியாவில் புதிய மேம்படுத்தப்பட்ட எலான்ட்ரா மாடலின் விலை சுமார் ரூ.14 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ.19 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என் எதிர்பார்க்கப்படுகிறது.

    சமீபத்தில் ஹூன்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்பதிவு துவங்கியது. இத்துடன் புதிய காரின் அதிகாரப்பூர்வ புகைப்படங்களையும் ஹூன்டாய் வெளியிட்டது. புதிய ஹூன்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் அக்டோபர் 3 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    Next Story
    ×