search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ரெனால்ட் கேப்டுர்
    X
    ரெனால்ட் கேப்டுர்

    சோதனையில் சிக்கிய ரெனால்ட் பி.எஸ். 6 கார்

    ரெனால்ட் நிறுவனத்தின் கேப்டுர் பி.எஸ். 6 கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.



    ரெனால்ட் நிறுவன பி.எஸ். 6 பெட்ரோல் மாடல் கார்களை இந்தியாவில் தீவிரமாக சோதனை செய்து வருகிறது. ரெனால்ட் கேப்டுர் எஸ்.யு.வி. புதிய ஸ்பை படங்களில் புதிய கார் பி.எஸ். 6 உபகரணங்களுடன் சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது.

    இத்துடன் புதிய கார் பி.எஸ். 6 பெட்ரோலில் மட்டுமே இயக்க வேண்டும் என தெரிகிறது. ரெனால்ட் நிறுவனம் கேப்டுர் பி.எஸ். 6 பெட்ரோல் மாடலை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ரெனால்ட் கேப்டுர் பி.எஸ். 6 மாடல் புத்தம் புதிய 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த என்ஜின் 150 பி.ஹெச்.பி. மற்றும் 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் சி.வி.டி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும்.

    ரெனால்ட் கேப்டுர் பி.எஸ். 6 ஸ்பை படம்

    தோற்றத்தில் புதிய கேப்டுர் பி.எஸ். 6 மாடல் தற்சமயம் விற்பனையாகும் மாடலை போன்றே காட்சியளிக்கிறது. தற்போதைய புகைப்படங்களில் காரின் வெளிப்புறத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும் என தெளிவாகவில்லை. தற்சமயம் விற்பனை செய்யப்படும் எஸ்.யு.வி.-யில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களுடன் விற்பனை செய்யப்படுகிறது.

    சமீபத்தில் ரெனால்ட் நிறுவனம் தனது டீசல் என்ஜின்களை பி.எஸ். 6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யாது என தெரிவித்தது. அந்த வகையில் ரெனால்ட் நிறுவனம் இரண்டு டர்போ பெட்ரோல் என்ஜின்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதில் என்ட்ரி லெவல் 1.0 லிட்டர் என்ஜின் 100 பி.ஹெச்.பி. பவர் 160 என்.எம். டார்க், 1.3 லிட்டர் என்ஜின் இருவித டியூனிங்கில் வழங்கப்படுகிறது. இது 130 பி.ஹெச்.பி. பவர், 240 என்.எம். டார்க் செயல்திறனும், 150 பி.ஹெச்.பி. பவர். 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

    புகைப்படம் நன்றி: 2019MotorworldIndia
    Next Story
    ×