search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ரெனால்ட் க்விட் கே-இசட்.இ.
    X
    ரெனால்ட் க்விட் கே-இசட்.இ.

    ரெனால்ட் க்விட் கிளைம்பர் ஃபேஸ்லிஃப்ட் ஸ்பை படங்கள்

    ரெனால்ட் நிறுவனத்தின் 2020 க்விட் கிளைம்பர் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.



    2020 ரெனால்ட் க்விட் கிளைம்பர் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் முதல் முறையாக வெளியாகியுள்ளன. ஸ்பை புகைப்படங்களின் படி புதிய காரின் முன்புறம் ரெனால்ட் க்விட் கே-இசட்.இ. மாடலை தழுவி உருவாகி இருக்கிறது. ரெனால்ட் கே-இசட்.இ சீன சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

    இத்துடன் எல்.இ.டி. டி.ஆர்.எல். மற்றும் ஹாலோஜன் ஹெட்லேம்ப் வழங்கப்படுகிறது. பின்புறம் புதிய டெயில் லேம்ப்கள், சி வடிவம் கொண்ட எல்.இ.டி. இன்சர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை தவிர காரில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதன் பம்ப்பர் முன்பைவிட அதிக பிரகாசமாக காட்சியளிக்கிறது. 

    ரெனால்ட் க்விட் கிளைம்பர் ஃபேஸ்லிஃப்ட் ஸ்பை படம்

    உள்புறம் அதிகளவு மாற்றப்பட்டு, மத்தியில் உள்ள டேஷ்போர்டு 8-இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்றிருக்கிறது. ஸ்பீடோமீட்டரும் டிஜிட்டல் யூனிட் கொண்டிருக்கிறது. டேஷ்போர்டில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்களும் பிரீமியமாக இருக்கும் என தெரிகிறது.

    கதவு, இருக்கை மற்றும் சென்டர் கன்சோலில் ஆரஞ்சு நிற அக்சென்ட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த கார் பி.எஸ். 6 ரக புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் இருக்கும். அந்த வகையில் 1.0 லிட்டர், 3 சிலிண்டர் என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 67 பி.ஹெச்.பி. பவர், 91 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும்.

    தற்சமயம் க்விட் கிளைம்பர் மேனுவல் டிரான்ஸ்மிஷன் விலை ரூ. 4.55 லட்சம் என்றும் ஏ.எம்.டி. வேரியண்ட் விலை ரூ. 4.85 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புகைப்படம் நன்றி: GaadiWaadi
    Next Story
    ×