search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    விடாரா பிரெஸ்ஸா
    X
    விடாரா பிரெஸ்ஸா

    சோதனையில் சிக்கிய 2020 விடாரா பிரெஸ்ஸா

    மாருதி சுசுகியின் 2020 விடாரா பிரெஸ்ஸா கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.



    மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபல காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலான விடாரா பிரெஸ்ஸா இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. புதிய மேம்பட்ட விடாரா பிரெஸ்ஸா இந்தியாவில் டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய ஸ்பை படங்களில் எஸ்.யு.வி. மாடலில் காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. முன்புறம் ஃபாக் லேம்ப், புதிய பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் புதிய ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்களில் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் பொருத்தப்பட்டுள்ளன. இதேபோன்று முன்புற கிரில் மேம்படுத்தப்படலாம் என தெரிகிறது.

    விடாரா பிரெஸ்ஸா ஸ்பை படம்

    காரின் பின்புறம் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படவில்லை. இதன் டெயில் லைட்கள் மற்றும் பின்புற ஸ்பாயிலர் தற்போதைய மாலில் இருப்பதை போன்றே வழங்கப்படலாம். உள்புறம் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் வழங்கப்படுகிறது.

    2020 விடாரா பிரெஸ்ஸா மாடலில் 1.5 லிட்டர் ஸ்மார்ட் ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இது 1462சிசி என்ஜின் 103.5 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 138 என்.எம். டார்க் செயல்கிறன் வழங்குகிறது. இதே என்ஜின் கடந்த ஆண்டு அறிமுகமான சியாஸ் மாடலிலும் வழங்கப்பட்டது.

    இந்த என்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 4-ஸ்பீடு ஆட்டோமேடிக் டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    புகைப்படம் நன்றி: GaadiWaadi

    Next Story
    ×