search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ
    X
    மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ

    மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ கார் குறித்த முக்கிய தகவல்கள் கசிந்தன

    மாருதி நிறுவனத்தின் எஸ் பிரெஸ்ஸோ காரின் நீள, அகலம் உள்ளிட்ட சில முக்கிய தகவல்கள் கசிந்துள்ளன. இது குறித்து விரிவாக பார்ப்போம்.
    எஸ்.யூ.வி ஸ்டைலிலான புதிய பட்ஜெட் கார் மாடலை மாருதி விரைவில் விற்பனை செய்ய உள்ளது. கடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மாருதியின் ஃப்யூச்சர் எஸ் கான்செப்டின்படி இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.

    மாருதி எஸ் பிரெஸ்ஸோ என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய கார் ரெனோ க்விட் காருக்கு நேரடி போட்டியாக நிலைநிறுத்தப்பட இருக்கிறது. இந்த காரின் நீள, அகல, உயரம் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் தற்போது கசிந்துள்ளன.

    மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ கார்

    இந்த மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் 3,565 மிமீ நீளமும், 1,520 மிமீ அகலமும், 1,564 மிமீ உயரமும் கொண்டது. இந்த காரின் வீல் பேஸ் 2,380 மிமீ ஆகும். இந்த கார் ரெனோ க்விட் காரைவிட நீள, அகலத்தில் குறைவாகவும், உயரத்தில் அதிகமாகவும் இருக்கிறது. இருப்பினும் இரண்டு கார்களுமே க்ரவுண்ட் க்ளிரயன்ஸ் 180 மிமீ ஆக உள்ளது.

    ரெனோ க்விட் காரில் 28 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் இருக்கும் நிலையில், இந்த எஸ் பிரெஸ்ஸோ காரில் 27 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, ரெனோ க்விட் காரில் 155/80 ஆர்13 டயர்கள் உள்ளன. ஆனால், இந்த எஸ் பிரெஸ்ஸோ காரில் 165/70 ஆர்14 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் வரும் 30ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.  கிட்டதட்ட  ரூ.5 லட்சம் விலையில் இந்த புதிய மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×