search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    பி.எம்.டபுள்யூ. 8 சீரிஸ் கூப்
    X
    பி.எம்.டபுள்யூ. 8 சீரிஸ் கூப்

    சோதனையில் சிக்கிய பி.எம்.டபுள்யூ. - விரைவில் இந்திய வருகை

    பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் 8 சீரிஸ் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.



    பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் 8 சீரிஸ் கூப் சர்வதேச சந்தையில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் இந்தியாவில் முதல் முறையாக சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதனால் புதிய பி.எம்.டபுள்யூ. கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பி.எம்.டபுள்யூ. 8 சீரிஸ் கூப் குர்கிராமில் சோதனை செய்யப்பட்ட புகைப்படங்களை மோட்டார்பீம் வெளியிட்டுள்ளது. புகைப்படங்களில் கார் முழுமையாக மறைக்கப்பட்டிருக்கிறது. எனினும், காரின் கூர்மையான லைன்கள், கிரீஸ் மற்றும் அதிரடி வடிவமைப்பு தெளிவாக தெரிகிறது.

    பி.எம்.டபுள்யூ. 8 சீரிஸ் கூப் ஸ்பை படம்

    ஜூன மாத இறுதியில் பி.எம்.டபுள்யூ. 8 சீரிஸ் மாடல் முனிச் நகரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. புதிய 8 சீரிஸ் கிரான் கூப் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இதில் 840ஐ மாடலில் டகர்போசார்ஜ் செய்யப்பட்ட 3.0 லிட்டர், இன்-லைன் 6-சிலிண்டர் பெட்ரோல் யூனிட் 340 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 500 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5.2 நொடிகளில் எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இத்துடன் 84டி மாடலில் 3.0 லிட்டர் இன்-லைன் 6-சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 320 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 680 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தை 5.1 நொடிகளில் எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு என்ஜின்களும் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    புகைப்படம் நன்றி: motorbeam
    Next Story
    ×