search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    கியா கார்னிவல்
    X
    கியா கார்னிவல்

    சென்னையில் சோதனை செய்யப்படும் கியா கார்னிவல்

    கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய கார்னிவல் எம்.பி.வி. கார் சென்னை அருகே சோதனை செய்யப்படும் புகைப்படம் லீக் ஆகியுள்ளது.



    கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது இரண்டாவது புதிய காரை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. கொரியாவை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனம் கியா கார்னிவல் காரை சோதனை செய்கிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கியாவின் அடுத்த மாடல் கார்னிவல் கார் தான் என கூறப்படுகிறது.

    கியா கார்னிவல் கார் ஏற்கனவே சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் நிலையில், இது சென்னையில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. ஸ்பை படங்களின் படி கியா கார்னிவல் கார் பின்புறம் ஸ்ப்லிட் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளது. 

    கியா கார்னிவல்

    காரின் முன்புறம் கியாவின் டிரேட்மார்க் டைகர் நோஸ் கிரில் மற்றும் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. எம்.பி.வி. காரில் பிரம்மாண்ட ஏர் டேம்கள், ஐஸ் கியூப் எல்.இ.டி. ஃபாக் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை பார்க்க செல்டோஸ் காரில் உள்ளதை போன்று காட்சியளிக்கிறது.

    கியா கார்னிவல் மாடலில் எளியமையான டேஷ்போர்டு வழங்கப்பட்டுள்ளது. எம்.பி.வி. காரில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதியும், கியாவின் யு.வி.ஒ. கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    இத்துடன் 3-சோன் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், ரெயின் சென்சிங் வைப்பர்கள், குரூஸ் கண்ட்ரோல் வழங்கப்படலாம். பாதுகாப்பிற்கு எட்டு ஏர்பேக், ஏ.பி.எஸ்., இ.பி.டி., எலெக்ட்ராணிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், 360-டிகிரி கேமரா, லேன் டிபார்ச்சர் வார்னிங், பிளைன்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன், முன்புறம் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார் மற்றும் கேமராக்கள் வழங்கப்படுகிறது.

    புகைப்படம் நன்றி: ZigWheels
    Next Story
    ×