search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    நெக்சான் ஸ்பை படம்
    X
    நெக்சான் ஸ்பை படம்

    புதிய வசதியுடன் சோதனையில் சிக்கிய டாடா நெக்சான்

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் கார் புதிய வசதியுடன் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.



    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் காரை அப்டேட் செய்ய இருக்கிறது. அப்டேட் செய்யப்பட்ட புதிய நெக்சான் விரைவில் அறிமுகமாக இருக்கும் நிலையில், சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

    புகைப்படங்களில் புதிய நெக்சான் கார் ஸ்டீரிங் வீலில் வலதுபுறத்தில் குரூஸ் கண்ட்ரோல் பட்டன்கள் வழங்கப்படுகிறது. இதுதவிர காரில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நெக்சான் காரின் புதிய புகைப்படங்கள் சித்தார்த் பாடில் என்பவரின் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. 

    தற்சமயம் டாடா நெக்சான் கார் 18 வேரியண்ட்களில் மொத்தம் எட்டு நிறங்களில் கிடைக்கிறது. இது 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு ரெவோடிரான் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது.

    நெக்சான் ஸ்பை படம்

    இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 108 பி.ஹெச்.பி. பவர், 170 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 108 பி.ஹெச்.பி. பவர், 260 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

    டாடா நெக்சான்: மொராக்கன் புளு, சியாட்டிள் சில்வர், கிளாஸ்கோ கிரெ, கால்கேரி வைட், வெர்மவுன்ட் ரெட் மற்றும் எட்னா ஆரஞ்சு என ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 6.58 லட்சத்தில் துவங்கி டாப்-எண்ட் மாடல் ரூ. 11.00 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மேம்பட்ட புதிய மாடல்களின் விலை ரூ. 8.0 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் விலை ரூ. 12.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நெக்சான் கார் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த கார் விடாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு இகோஸ்போர்ட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    புகைப்படம் நன்றி: Siddharth Patil
    Next Story
    ×