search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    பெனலி டி.என்.டி. 600ஐ ஸ்பை படம்
    X
    பெனலி டி.என்.டி. 600ஐ ஸ்பை படம்

    இணையத்தில் லீக் ஆன 2020 பெனலி டி.என்.டி. 600ஐ புகைப்படங்கள்

    பெனலி நிறுவனத்தின் 2020 பெனலி டி.என்.டி. 600ஐ மோட்டார்சைக்கிள் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.



    2020 பெனலி டி.என்.டி. 600ஐ மோட்டார்சைக்கிள் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய புகைப்படங்கள் அரங்கில் எடுக்கப்பட்டிருக்கிறது.

    தற்போதைய புகைப்படங்களின் படி டி.என்.டி. 600ஐ மோட்டார்சைக்கிள் கூர்மையாக காட்சியளிக்கிறது. இதன் முன்புறம் மேம்படுத்தப்பட்டு புதிய எல்.இ.டி. ஹெட்லைட் யூனிட் கொண்டிருக்கிறது. மாஸ்கில் டூயல்-டோன் ஃபினிஷ் வாகனத்தின் ஒட்டுமொத்த தோற்றத்தை மேம்படுத்துகிறது.

    முன்புறம் இன்டிகேட்டர்கள் டேன்க் ஷிரவுட்களில் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதால், தோற்றம் தெளிவாக இருக்கிறது. இதன் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலில் டி.எஃப்.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. 2020 டி.என்.டி. 600ஐ மாடலில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வசதியும் வழங்கபப்டலாம் என தெரிகிறது.

    பெனலி டி.என்.டி. 600ஐ ஸ்பை படம்

    இதன் ஃபியூயல் டேன்க் ஆங்குலர் வடிவைப்பு பெற்றிருக்கிறது. இதில் பெனலி பேட்ஜ் டேன்க்கின் பிளாக்டு-அவுட் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. பின்புறம் அன்டர்-சீட் எக்சாஸ்ட் மற்றும் கன்வென்ஷனல் நம்பர் பிளேட் கொண்டிருக்கிறது. இதன் எக்சாஸ்ட் பார்க்க டி.என்.டி. 600 ஜி.டி. மாடலில் உள்ளதை போன்று காட்சியளிக்கிறது.

    ஹார்டுவேர் அம்சங்களை பொருத்தவரை முன்புறம் அப்சைடு-டவுன் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் கொண்டிருக்கிறது. பிரேக்கிங்கிற்கு டூயல்-டிஸ்க் செட்டப் மற்றும் டூயல்-சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்பட்டுள்ளது.

    பெனலி டி.என்.டி. 600ஐ மாடலில் இன்லைன் 4-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 85 பி.ஹெச்.பி. பவர், 54.6 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்தியாவில் பெனலி டி.என்.டி. 600ஐ மாடல் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் இருக்கும் என தெரிகிறது.
    Next Story
    ×