search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ரெனால்ட் டிரைபர்
    X
    ரெனால்ட் டிரைபர்

    இணையத்தில் லீக் ஆன ரெனால்ட் டிரைபர் ஸ்பை படங்கள்

    ரெனால்ட் நிறுவனத்தின் டிரைபர் எம்.பி.வி. கார் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.



    ரெனால்ட் நிறுவனம் விரைவில் தனது டிரைபர் எம்.பி.வி. காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கார் ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், டிரைபர் கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. சோதனையின் போது டிரைபர் கார் மறைக்கப்படாமல், தெளிவாக இருக்கிறது. டிரைபர் மாடல் ஆரஞ்சு மற்றும் ரெட் என இரண்டு நிறம் கொண்ட கார்கள் அடுத்தடுத்து செல்லும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

    ஸ்பை படங்களில் அலாய் வீல், எல்.இ.டி. டெயில் லைட், சில்வர் ஸ்கஃப் பிளேட், ரியர் வைப்பர்கள் காணப்படுவதால் இதுடிரைபர் டாப்-எண்ட் மாடலாக இருக்கும் என தெரிகிறது. கடந்த மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெனால்ட் டிரைபர் இந்திய மாடல் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.

    ரெனால்ட் டிரைபர் ஸ்பை படம்

    ரெனால்ட் டிரைபர் 3990எம்.எம். நீளம், 1739எம்.எம். அகலம், 1643எம்.எம். உயரமாக இருக்கிறது. இதன் வீல்பேஸ் 2636 எம்.எம். அளவில் கிரவுண்ட் கிளியரன்ஸ் 182எம்.எம். ஆகும். டிரைபர் எம்.பி.வி. கார் ஏழு பேர் பயணிக்கக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூன்றாம் அடுக்கு இருக்கைகளை தேவைப்பட்டால் கழற்றிக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    புதிய டிரைபர் காரில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. ஃபாக் லேம்ப்கள், க்ரோம் ஸ்டட் கிரில் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதன் உள்புறம் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    உள்புற உபகரணங்கள் மென்மையான பொருட்களால் செய்யப்பட்டுள்ளது. இதன் சென்ட்ரல் கன்சோலை சுற்றி பியானோ பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஏ.பி.எஸ்., இ.பி.டி. ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஹை-ஸ்பீடு வார்னிங் சிஸ்டம், சீட்-பெல்ட் ரிமைண்டர், ஐசோஃபிக்ஸ் சீட் மவுண்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    புகைப்படம் நன்றி: carandbike
    Next Story
    ×