search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஆடி கியூ5 - கோப்புப்படம்
    X
    ஆடி கியூ5 - கோப்புப்படம்

    ஆடி கியூ5 ஃபேஸ்லிஃப்ட் - முதல் முறை வெளியான ஸ்பை படங்கள்

    ஆடி நிறுவனத்தின் கியூ5 ஃபேஸ்லிஃப்ட் கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் முதல் முறையாக வெளியாகியுள்ளது.



    ஆடி நிறுவன எஸ்.யு.வி. மாடல்கள் பற்றிய விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் ஆடி கியூ5 இணைந்திருக்கிறது. இந்த கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் முதல்முறையாக இணையத்தில் வெளியாகியுள்ளது.

    2008 ஆம் ஆண்டு அறிமுகமான ஆடி கியூ5 காரின் இரண்டாம் தலைமுறை மாடல் தற்சமயம் சோதனை செய்யப்படுகிறது. புதிய ஸ்பை படங்களின் படி புதிய காரில் ஹெக்சாகோனல் கிரில் வழங்கப்பட்டுள்ளது. இது புதிய ஆடி கார்களில் வழங்கப்படுவதை போன்று காட்சியளிக்கிறது.

    காரின் பின்புறம் புதிய டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் டெயில்கேட் பார்க்க ஒரே மாதிரி இருக்கிறது. லோயர் பம்ப்பர் வடிவமைப்பும் பார்க்க ஒரே மாதிரி இருக்கிறது. காரின் பக்கவாட்டில் அதிகளவு மாற்றங்கள் இருப்பதாக தெரியவில்லை.

    ஆடி கியூ5 ஃபேஸ்லிஃப்ட் ஸ்பை படம்

    சர்வதேச சந்தையில் ஆடி கியூ5 கார் பிளக்-இன் ஹைப்ரிட் வடிவில் கிடைக்கிறது. இது கியூ5 55 TFSI இ குவாட்ரோ என அழைக்கப்படுகிறது. இதில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 105 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.

    இவை இணைந்து 367 பி.எஸ். பவர், 500 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5.3 நொடிகளில் எட்டும். இந்தியாவில் கியூ5 மாடல் 2.0 லிட்டர் TFSI பெட்ரோல் மற்றும் TDI டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இவை முறையே 252 பி.எஸ். மற்றும் 190 பி.எஸ். செயல்திறன் வழங்குகின்றன. புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் இதே என்ஜின்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் 2021 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. அதன் பின் இது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படலாம்.

    இந்தியாவில் ஆடி கியூ5 விலை ரூ. 55.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) துவங்கி டாப் எண்ட் மாடல் ரூ. 59.98 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    புகைப்படம் நன்றி: Motor1
    Next Story
    ×