search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    பி.எம்.டபுள்யூ. 2 சீரிஸ் கிரான் கூப் ஸ்பை படம்
    X
    பி.எம்.டபுள்யூ. 2 சீரிஸ் கிரான் கூப் ஸ்பை படம்

    இறுதிக்கட்ட சோதனைகளில் பி.எம்.டபுள்யூ. 2 சீரிஸ் கிரான் கூப்

    பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் 2 சீரிஸ் கிரான் கூப் கார் இறுதிக்கட்ட சோதனை நடைபெற்று வருகிறது.



    பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் 2 சீரிஸ் கிரான் கூப் கார் இறுதிக்கட்ட சோதனை நடைபெற்று வருகிறது. பிரீமியம் காம்பேக்ட் பிரிவில் களமிறங்க இருக்கும் புதிய நான்கு கதவுகள் கொண்ட கூப் மாடல் முனிச் பகுதியில் சோதனை செய்யப்படுகிறது.

    இந்நிலையில், பி.எம்.டபுள்யூ. தனது 2 சீரிஸ் கிரான் கூப் மாடலை நவம்பர் 2019 இல் நடைபெற இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ விழாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. சர்வதேச சந்தையில் இதன் வெளியீடு அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் நடைபெற இருக்கிறது.

    பி.எம்.டபுள்யூ. 2 சீரிஸ் கிரான் கூப் மாடலில் முன்புற வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் சேசிஸ் தொழில்நுட்பம், புதுவித கண்ட்ரோல் சிஸ்டம்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் புதிய காரின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக ARB இருக்கிறது. இது என்ஜினில் நேரடியாக பொருத்தப்பட்டுள்ள ஸ்லிப் கண்ட்ரோலரை பயன்படுத்துகிறது.

    பி.எம்.டபுள்யூ. 2 சீரிஸ் கிரான் கூப் ஸ்பை படம்

    இந்த டிராக்‌ஷன் கண்ட்ரோல் தொழில்நுட்பம் வழக்கமான பி.எம்.டபுள்யூ. செயல்திறன் கட்டுப்பாட்டு தொழில்நுட்பத்துடன் இணைந்து செயல்படுகிறது. இதனால் காரை ஓட்டுபவருக்கு சிறப்பான அனுபவம் கிடைக்கும். 2 சீரிஸ் கிரான் கூப் மாடலில் நான்கு சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்படுகிறது.

    இந்த என்ஜின் 302 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் மெக்கானிக்கல் டார்சென் லிமிட்டெட்-ஸ்லிப் எனும் புதிய தொழில்நுட்பத்துடன் வருகிறது.
    Next Story
    ×