search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    2020 மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட்
    X
    2020 மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட்

    கம்பீர தோற்றத்தில் உருவாகும் 2020 மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட்

    2020 மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்.யு.வி. மாடலின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



    2020 மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. புதிய பஜேரோ ஸ்போர்ட் ஜூலை 25 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய புகைப்படங்களில் கார் மறைக்கப்படாமல் தெளிவாக காட்சியளிக்கிறது.

    அந்த வகையில் புதிய காரின் முன்புறம் மேம்ப்ட்ட கிரில், மெல்லிய எல்.இ.டி. ஹெட்லேம்ப் கிளஸ்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. 2020 மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் முன்புற பம்ப்பர்களும் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. புதிய பம்ப்பர்கள் பெரிய சென்ட்ரல் ஏர்-இன்டேக் கொண்டிருக்கின்றன.

    தற்போதைய மாடலுடன் ஒப்பிடும் போது புதிய காரின் ஃபாக் லேம்ப்கள் பம்ப்பரின் மேல்புறம் பொருத்தப்பட்டுள்ளது. காரின் பக்கவாட்டில் கூர்மையான ஷோல்டர் லைன் மற்றும் கிரீஸ்கள் செய்யப்பட்டுள்ளன. இத்துடன் வீல் ஆர்ச்கள், க்ரோம் ORVMகள் வழங்கப்பட்டுள்ளன.

    2020 மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட்

    காரின் பின்புறம் ரூஃப் மவுன்ட்டெட் ஸ்பாயிலர், செங்குத்தாக பொருத்தப்பட்ட மெல்லிய எல்.இ.டி. டெயில்லைட்கள், சில்வர் ஸ்கஃப் பிளேட்கள் வழங்கப்பட்டுள்ளன. காரின் உள்புறம் முற்றிலும் கருப்பு நிறத்தாலான கேபின், சில்வர் நிற அக்சென்ட்கள் செய்யப்பட்டுள்ளன. 

    இதன் மத்தியில் சென்டர் கன்சோல், ஸ்டீரிங் வீல், டிரைவர் சைடு டேஷ்போர்டு, கியர் நாப், டோர் ஹேன்டில்கள் வழங்கப்பட்டுள்ளன. சென்டர் கன்சோலில் பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், செங்குத்தாக பொருத்தப்பட்ட ஏ.சி. வென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்தியாவில் மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் மாடலில் 2.5 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 176 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்க் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படம் நன்றி: Autoindustriya
    Next Story
    ×