search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஹூன்டாய் வெர்னா
    X
    ஹூன்டாய் வெர்னா

    ஹூன்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் புகைப்படங்கள் வெளியானது

    ஹூன்டாய் நிறுவனத்தின் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



    ஹூன்டாய் நிறுவனத்தின் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலை உருவாக்கும் பணிகளில் அந்நிறுவனம் சிலகாலமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இந்த காரின் புகைப்படங்கள் முதல்முறையாக வெளியாகியுள்ளது. இவை சீனாவில் இருந்து வெளியாகியிருக்கலாம் என தெரிகிறது.

    புதிய வெர்னா கார் பார்க்க வெளிநாடுகளில் ஹூன்டாய் விற்பனை செய்து வரும் புதிய தலைமுறை சொனாட்டா, மேம்பட்ட எலான்ட்ரா மற்றும் ஐயோனிக் போன்றவற்றை தழுவிய தோற்றம் கொண்டிருக்கிறது. காரின் முன்புறம் இதுவரை இல்லாத வகையில் பிரம்மாண்டமாக தெரிகிறது.

    ஹூன்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்

    இதன் பம்ப்பரும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இது பிளாக் பிளாஸ்டிக் மற்றும் சாடின் கிரே பிட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. காரின் பக்கவாட்டில் டைமண்ட் கட் டூயல்-டோன் அலாய் வீல் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் புதிய பூட் வடிவைப்பு, எல்.இ.டி. ஸ்ட்ரிப் வழங்கப்பட்டுள்ளது. இதன் நம்பர் பிளேட் சற்று கீழே நகர்த்தப்பட்டுள்ளது. 

    புதிய வெர்னா காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இவை பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. இதே என்ஜின் புதிய தலைமுறை கிரெட்டா மற்றும் மேம்படுத்தப்பட்ட எலான்ட்ரா கார்களிலும் வழங்கப்படலாம்.

    இதில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 115 ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் வழங்குகிறது. 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின்  48 வோல்ட் ஹைப்ரிட் சிஸ்டத்துடன் வரும் என தெரிகிறது. எனினும், இது பயனர் விரும்பினால் தேர்வு செய்து கொள்ளும் ஆப்ஷனாக கிடைக்கும் என கூறப்படுகிறது.

    புகைப்படம் நன்றி: autohome
    Next Story
    ×