search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300
    X
    மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300

    மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 பி.எஸ். 6 ஸ்பை படங்கள்

    மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்.யு.வி.300 காரின் பி.எஸ். 6 வேரியண்ட் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



    மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 பி.எஸ். 6 என்ஜின் கொண்ட கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் மேம்பட்ட புகை விதிகளுக்கு பொருந்தும் மஹிந்திராவின் முதல் வாகனமாக எக்ஸ்.யு.வி.300 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த ஆண்டு இறுதியில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 டீசல் வேரியண்ட்டும் புதிய விதிகளுக்கு பொருந்தும் வகையில் மேம்படுத்தப்படும் என கூறப்படுகிறது. சோதனை செய்யப்படும் கார் முழுமையாக மறைக்கப்பட்டுள்ள நிலையில், காரில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் வித்தியாசங்கள் தெளிவாக தெரியவில்லை.

    மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 பி.எஸ். 6 ஸ்பை படம்

    எனினும், இந்த காரில் காஸ்மெடிக் மாற்றங்களும் மேற்கொள்ளப்படலாம் என தெரிகிறது. மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 பி.எஸ்.6 வேரியண்ட் விலை தற்போதைய மாடலை விட விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த காரில் மேம்பட்ட மென்பொருள் மற்றும் புதிய எக்சாஸ்ட் சிஸ்டம் வழங்கப்படும் என தெரிகிறது.

    மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பெட்ரோல் என்ஜின் 1.2 லிட்டர், 3-சிலிண்டர், டர்போ சார்ஜ்டு யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 110 பி.ஹெச்.பி. பவர். 200 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    இதன் டீசல் யூனிட் 1.5 லிட்டர், 4-சிலிண்டர் டர்போ என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் மராசோ மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 115 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    புகைப்படம் நன்றி: GaadiWaddi
    Next Story
    ×