search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    2020 பி.எஸ். 6 தண்டர்பேர்டு ஸ்பை படம்
    X
    2020 பி.எஸ். 6 தண்டர்பேர்டு ஸ்பை படம்

    தீவிர சோதனையில் 2020 பி.எஸ். 6 தண்டர்பேர்டு

    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 2020 பி.எஸ். 6 தண்டர்பேர்டு மோட்டார்சைக்கிள் தீவிர சோதனை செய்யப்படுகிறது.



    ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய தலைமுறை தண்டர்பேர்டு மாடல் சோதனை செய்யப்படும் வீடியோ வெளியாகியுள்ளது. வீடியோவில் புதிய மோட்டார்சைக்கிளின் புதிய விவரங்கள் கிடைத்திருக்கிறது.

    புதிய தலைமுறை தண்டர்பேர்டு மாடலில் ஃபியூயல் இன்ஜெக்டெட் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு ஏற்ற என்ஜின் வழங்கப்படுகிறது. ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 2002 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 350சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. பின் 2012 ஆம் ஆண்டு 350 மற்றும் 500 வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

    பின் பல்வேறு ஆண்டுகளில் ராயல் என்ஃபீல்டு பல்வேறு மாடல்களை அறிமுகம் செய்தது. 2018 ஆம் ஆண்டு தண்டர்பேர்டு எக்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. தண்டர்பேர்டு மாடலில் பழைய ஹார்டுவேர் மற்றும் சைக்கிள் பாகங்கள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், புதிய தலைமுறை மாடல் அறிமுகம் செய்யப்படுகிறது.

    2020 பி.எஸ். 6 தண்டர்பேர்டு ஸ்பை படம்

    தற்சமயம் வெளியாகியிருக்கும் வீடியோவின் படி புதிய மாடலில் டூயல்-கிரேடில் டிசைன், சிங்கிள் டவுன்டியூப் டிசைன் பயன்படுத்தப்படுகிறது. இந்த என்ஜின் கேஸ்களும் புதிய வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. புதிய மாடலில் அதிர்வுகளை குறைக்க என்ஜின் மவுண்ட்களில் ரப்பர் டேம்பிங் செய்யப்படுகிறது.

    இத்துடன் ஹெட்லேம்ப் மற்றும் ஹேண்டில்பார் உள்ளிட்டவையும் முந்தைய மாடல்களை விட கீழே பொருத்தப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் டேன்க் தற்போதைய மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது.
    Next Story
    ×