search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    சுசுகி அக்சஸ் 125
    X
    சுசுகி அக்சஸ் 125

    மேட் ரெட் நிறத்தில் சுசுகி அக்சஸ் 125 ஸ்பெஷல் எடிஷன்

    சுசுகி அக்சஸ் 125 ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர் மேட் ரெட் நிற மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.



    சுசுகி நிறுவனம் இந்தியாவில் தனது அக்சஸ் 125 ஸ்கூட்டரை 2007 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. ஸ்கூட்டர் பிரிவில் சுசுகி அக்சஸ் 125 அதிகம் விற்பனையாகும் மாடலாக இருக்கிறது.

    எனினும், ஒவ்வொரு ஆண்டை போன்றே இந்த வருடமும் சுசுகி நிறுவனம் தனது அக்சஸ் 125 ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருக்கிறது. சிறிதளவு காஸ்மெடிக் மாற்றங்களுடன் உருவாகும் ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர் மேட் ரெட் நிறம் கொண்டிருக்கிறது.

    சுசுகி அக்சஸ் 125 ஸ்பை படம்

    சுசுகி அக்சஸ் 125 ஸ்பெஷல் எடிஷன் மாடல்- மெட்டாலிக் மேட் பிளாக், பியல் மிரேஜ் வைட் மற்றும் மெட்டாலிக் சோனிக் சில்வர் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. எனினும், புதிய நிறம் கொண்டிருக்கும் ஸ்கூட்டரின் ஃபூட்போர்டு, உள்புறங்களில் பெய்க் நிறம் மற்றும் மேட் பிளாக் நிற அலாய் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய லிமிட்டெட் எடிஷன் அக்சஸ் ஸ்கூட்டரில் 124சிசி, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 8.6 பி.ஹெச்.பி. பவர், 10.2 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    இந்தியாவில் சுசுகி அக்சஸ் ஸ்டான்டர்டு வேரியண்ட் விலை ரூ. 60,188 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஸ்பெஷல் எடிஷன் விலை ரூ. 1600 அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புகைப்படம் நன்றி: BikeAdvice
    Next Story
    ×