search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஹோன்டா சி.ஆர். வி
    X
    ஹோன்டா சி.ஆர். வி

    முதல்முறையாக சோதனையில் சிக்கிய ஹோன்டா சி.ஆர். வி ஃபேஸ்லிஃப்ட் கார்

    ஹோன்டா நிறுவனத்தின் சி.ஆர். வி ஃபேஸ்லிஃப்ட் கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் முதல் முறையாக வெளியாகியுள்ளது.



    ஹோன்டா சி.ஆர். வி ஃபேஸ்லிஃப்ட் கார் சோதனை செய்யப்படும் புகைப்படம் முதல் முறையாக இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 2003 ஆம் ஆண்டு அறிமுகமான ஹோன்டா சி.ஆர். வி ஐந்து தலைமுறைகளாக விற்பனை செய்யப்படுகிறது.

    இதன் சமீபத்திய மாடல் 2017 ஆம் ஆண்டு சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு அக்டோபர் 2018 இல் இந்தியாவில் அறிமுகமானது. தற்சமயம் இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அமெரிக்காவில் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

    ஹோன்டா சி.ஆர். வி ஃபேஸ்லிஃப்ட் ஸ்பை படம்

    கார் முழுவதுமாக மறைக்கப்பட்ட நிலையில், சோதனை செய்யப்படும் சி.ஆர். வி ஃபேஸ்லிஃப்ட் காஸ்மெடிக் மாற்றங்களை மட்டும் பெறுமா என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை. காரின் ஒட்டுமொத்த வடிவமைப்பில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படவில்லை. காரின் ஹெட்லேம்ப்பில் சிறிதளவு மாற்றம் செய்யப்பட்டு, முன்புற கிரில், பெரிய க்ரோம் சென்டர் பார் பெறும் என தெரிகிறது.

    பின்புறம் மேம்பட்ட வடிவமைப்பில் டிரேப்சொய்டல் எக்சாஸ்ட் டிப்களும், பம்ப்பர் கவரில் குவாட்டர் பேனல்கள் வழங்கப்படுகிறது. காரின் உள்புற அம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், இதில் 7.0 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.

    ஹோன்டா சி.ஆர். வி ஃபேஸ்லிஃப்ட் ஸ்பை படம்

    புதிய ஹோன்டா சி.ஆர்.வி. மாடலில்: 2.4 லிட்டர் மற்றும் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 1.5 லிட்டர் 186 பி.எஸ். அல்லது 192 பி.எஸ். பவர் வழங்கும். இதன் இந்திய மாடலில் 1.6 லிட்டர் 120 பி.எஸ். / 300 என்.எம். டீசல் மற்றும் 2.0 லிட்டர் 154 பி.எஸ். / 189 என்.எம். பெட்ரோல் மோட்டார் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    புகைப்படம் நன்றி: Motor1
    Next Story
    ×