search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஐரோப்பாவில் சோதனை செய்யப்படும் 2020 ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட்
    X

    ஐரோப்பாவில் சோதனை செய்யப்படும் 2020 ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட்

    ஸ்கோடா நிறுவனம் ஐரோப்பாவில் 2020 கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் காரை சோதனை செய்து வரும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.



    ஸ்கோடா நிறுவனத்தின் 2020 கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் எஸ்.யு.வி. கார் ஐரோப்பாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி இருப்பது இதுவே முதல் முறையாகும். 

    சோதனையின் போது காரின் முன்புறம் மற்றும் பின்பக்கம் மறைக்கப்பட்டுள்ளது. கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் காரில் புதிய பம்ப்பர் வழங்கப்படுகிறது. இதன் முன்புற ஃபென்டர்களில் ஸ்போர்ட்லைன் பேட்ஜ் காணப்படுகிறது. இது காரில் பெரிய மற்றும் ஸ்போர்ட் தோற்றம் கொண்ட சக்கரங்களை வழங்கப்படுவதை உணர்த்துகிறது.  



    ஃபிளாக்‌ஷிபி எஸ்.யு.வி. மாடலில் 2.0 TDI இவோ டீசல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் செயல்திறன் வெவ்வேறு அளவுகளில் டியூன் செய்யப்படும் என தெரிகிறது. செடான் மாடலில் எலெக்ட்ரிக் மோட்டார் 1.4 லிட்டர் டி.எஸ்.ஐ. 4-சிலிண்டர் என்ஜினுடன் வருகிறது. 

    இதன் 1.4 லிட்டர் டி.எஸ்.ஐ. யூனிட் 156 பிஎஸ். செயல்திறனும், எலெக்ட்ரிக் மோட்டார் 115 பி.எஸ். செயல்திறனும் வழங்குகிறது. கோடியாக் மாடலிலும் இதே டியூனிங் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின்களுடன் வெளியாகும் என கூறப்படுகிறது.

    புகைப்படம் நன்றி: Motor1
    Next Story
    ×