search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    இந்தியாவில் சோதனை செய்யப்படும் ரெனால்ட் எலெக்ட்ரிக் கார்
    X

    இந்தியாவில் சோதனை செய்யப்படும் ரெனால்ட் எலெக்ட்ரிக் கார்

    ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.



    ரெனால்ட் க்விட் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. க்விட் எலெக்ட்ரிக் கார் சிட்டி கே-இசட்.இ. ஹேட்ச்பேக் மாடலை தழுவி உருவாகி இருக்கிறது. இந்த ஹேட்ச்பேக் கார் சர்வதேச சந்தையில் சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது.

    க்விட் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த கார் சோதனை செய்யப்படும் காரின் வீடியோவில் கார் முழுமையாக மறைக்கப்பட்டிருக்கிறது. தற்போதைய க்விட் காரை போன்று சி.எம்.எஃப்.-ஏ பிளாட்ஃபார்மில் புதிய எலெக்ட்ரிக் கார் உருவாகியிருக்கிறது.



    எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார் பார்க்க க்விட் போன்றே காட்சியளிக்கிறது. எனினும், எலெக்ட்ரிக் காரின் வடிவமைப்பில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது. அந்த வகையில் புதிய காரில் மெல்லிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், பம்ப்பரில் மவுண்ட் செய்யப்பட்ட புதிய ஹெட்லேம்ப்கள், முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்ட முன்புற கிரில் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    ரெனால்ட் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 250 கிலோமீட்டர் செல்லும் திறன் கொண்டிருக்கும் என்றும், இதில் வழங்கப்படும் பேட்டரியை 50 நிமிடங்களில் 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்திட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புகைப்படம் நன்றி: Tahir Khokar
    Next Story
    ×