என் மலர்
ஆட்டோமொபைல்
- டாடா கர்வ் EV இருவித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
- டாடா கர்வ் EV மாடலுக்கு காத்திருப்பு காலம் அதிகரிக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கர்வ் EV மற்றும் கர்வ் கூப் எஸ்யுவி மாடல்களை சமீபத்தில் அறிமுகம் செய்து விற்பனைக்கும் கொண்டுவந்தது. புதிய கர்வ் மாடல்களின் வினியோகம் இம்மாத இறுதியில் துவங்க இருக்கிறது. இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும்.
இது குறித்து வெளியான தகவல்களின் படி புதிய கர்வ் EV மாடல்களை வாங்க கணிசமான வாடிக்கையாளர்கள் விருப்பம் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த காரை வாங்க ஏற்கனவே மூன்ற இலக்க எண்களில் முன்பதிவு கடந்துள்ளதாக தெரிகிறது.

தற்போது டாப் என்ட் மாடல்கள் மட்டுமே விற்பனை மையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. முதற்கட்ட வினியோகத்தில் டாப் எண்ட் மாடல்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிகிறது.
இந்திய சந்தையில் டாடா கர்வ் EV மாடல் 45 கிலோவாட் ஹவர் மற்றும் 55 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றில் இரு மாடல்களுக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் 45 கிலோவாட் ஹவர் மாடலை டெலிவரி பெற வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் எட்டு வார காலம் காத்திருக்க வேண்டும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 55 கிலோவாட் ஹவர் வேரியண்ட்-ஐ டெலிவரி எடுக்க ஆறு வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும்.
- ஒகாயா எல்க்ட்ரிக் நிறுவன மாடல்களுக்கு விலை குறைப்பு வழங்கப்படுகிறது.
- இம்மாத இறுதி வரை ஒகாயா ஸ்கூட்டர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறது.
ஒகாயா எலக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் தனது வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை புதிய ஒகாயா ஸ்கூட்டர்களை வாங்குவோருக்கு ரூ. 31 ஆயிரம் வரையிலான பலன்களை வழங்குகிறது.
இத்துடன் புதிய ஒகாயா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பயனர்கள் ரூ. 1 மட்டும் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். விலை குறைப்பு மற்றும் நிதி சலுகைகள் ஆகஸ்ட் மாத இறுதி அல்லது ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்படும் என்று ஒகாயா எலக்ட்ரிக் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
இந்திய சந்தையில் ஒகாயா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் புதிய விலை அதன் ஃப்ரீடம் மாடலுக்கு ரூ. 74 ஆயிரத்து 899 என துவங்கி டாப் எண்ட் மோட்டோஃபாஸ்ட் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரம் என மாற்றப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
தற்போது ஒகாயா நிறுவனம் இந்த மாடல்களை மாத தவணையில் வாங்குவோருக்கு சிறப்பு சலுகைகள் வழங்குகிறது. அதன்படி மாத தவணைக்கான வட்டி 6.99 சதவீதம் என்றும் மாத தவணை கட்டணம் ரூ. 2 ஆயிரத்து 999 முதல் துவங்குகிறது.

புதிய விலை விவரங்கள்:
ஒகாயா மோட்டோபாஸ்ட் ரூ. 1 லட்சத்து 54 ஆயிரத்தில் இருந்து ரூ. 1 லட்சத்து 29 ஆயிரம் என மாறி இருக்கிறது.
ஒகாயா பாஸ்ட் எப்3 விலை ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்தில் இருந்து ரூ. 1 லட்சத்து 09 ஆயிரம் என மாறி இருக்கிறது.
ஒகாயா பாஸ்ட் எப்4 விலை ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து ரூ. 1 லட்சத்து 19 ஆயிரம் என மாறி இருக்கிறது.
ஒகாயா பாஸ்ட் எப்2பி விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்தில் இருந்து ரூ. 94 ஆயிரத்து 998 என மாறி இருக்கிறது.
ஒகாயா பாஸ்ட் எப்2டி விலை ரூ. 1 லட்சத்து 05 ஆயிரத்தில் இருந்து ரூ. 94 ஆயிரத்து 998 என மாறி இருக்கிறது.
ஒகாயா பாஸ்ட் எப்2எப் விலை ரூ. 98 ஆயிரத்து 802-இல் இருந்து ரூ. 83 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது.
ஒகாயா பிரீடம் விலை ரூ. 78 ஆயிரத்து 557-இல் இருந்து ரூ. 74 ஆயிரத்து 899 என மாறி இருக்கிறது.
- தார் ராக்ஸ் மாடல் இருவித எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
- தார் ராக்ஸ் மாடல் ஆட்டோமேடிக், மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தார் ராக்ஸ் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 5 கதவுகள் கொண்ட தார் ராக்ஸ் மாடலின் விலை ரூ. 12 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டீசல் வேரியண்ட் விலை ரூ. 13 லட்சத்து 99 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
புதிய தார் ராக்ஸ் மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட எம்-ஸ்டேலியன் டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 160 ஹெச்பி பவர், 330 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.
இத்துடன் 2.2 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட, எம்ஹாக் டீசல் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த யூனிட் 150 ஹெச்பி பவர், 330 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இரு மாடல்களுடன் 6 ஸ்பீடு மஏனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

2024 மஹிந்திரா தார் ராக்ஸ் மாடலில் புதிய கிரில், சி வடிவம் கொண்ட எல்இடி டிஆர்எல்கள், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், வட்ட வடிவம் கொண்ட ஃபாக் லைட்கள், டூயல் டோன் அலாய் வீல்கள், பின்புறம் எல்இடி டெயில் லைட்கள், டெயில்கேட்டில் ஸ்பேர் வீல் பொருத்தப்பட்டு இருக்கிறது.
உள்புறம் புதிய 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, டிஜிட்டல் கலர் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வென்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், பானரோமிக் சன்ரூஃப், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், பின்புற ஏசி வென்ட்கள் வழங்கப்படுகின்றன.
இந்திய சந்தையில் புதிய தார் ராக்ஸ் மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட், எம்ஜி ஆஸ்டர், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
- இந்த பைக்கின் ஆரம்பகட்ட விலை ₹1.73 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- இந்த புதிய ஜாவா 42 பைக் 14 வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் மேம்படுத்தப்பட்ட ஜாவா 42 பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஜாவா பைக் 18 வகை வேரியண்ட்களில் கிடைக்கிறது,
இந்த பைக்கின் ஆரம்பகட்ட விலை ₹1.73 லட்சமாக (Ex-Showroom) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இந்த பைக் 1.98 lakh லட்சதிக்ரு (Ex-Showroom) விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கு முந்தைய ஜாவா பைக்குகளை விட இந்த மேம்படுத்தப்பட்ட ஜாவா பைக்கின் விலை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஜாவா 42 பைக் 14 வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய வகை ஜே-பேந்தர் எஞ்சின் இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஓர் 294 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் ஆகும். இந்த மோட்டார் அதிகபட்சமா 27.32 பிஎஸ் மற்றும் 26.84 என்எம் டார்க் வரை சக்தியை வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் அதிக இரைச்சலை ஏற்படுத்தாது என ஜாவா நிறுவனம் தெரிவித்துள்ளது.

- சுசுகி ஹஸ்லர் மாடல் சர்வதேச சந்தைகளில் கிடைக்கிறது.
- சுசுகி ஹஸ்லர் மாடல் பாக்ஸி ஸ்டைல் கொண்டிருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் பாக்ஸி ஸ்டைல் மைக்ரோ எஸ்யுவி கார் இந்தியாவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். சர்வதேச சந்தையில் ஹஸ்லர் எனும் பெயரில் விற்பனை செய்யப்படும் இந்த கார் தற்போது இந்திய சாலைகளில் டெஸ்டிங் செய்யப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு முதல் விற்பனை செய்யப்படுகிறது.
அளவில் 3.3 மீட்டர்களும், 2.4 மீட்டரில் வீல் பேஸும் கொண்டுள்ள ஹஸ்லர் மாடல் தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எம்ஜி கொமெட் மற்றும் மாருதி ஆல்டோ கார்களை போன்ற அளவில் தான் இருக்கும். இந்த காரில் 660சிசி எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த எஞ்சின் 48 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இதே எஞ்சினின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் 64 ஹெச்பி திறன் வெளிப்படுத்தும். இத்துடன் CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. தோற்றத்தில் இந்த கார் ஜிம்னி மற்றும் எஸ் பிரெஸ்ஸோ மாடல்களை சேர்த்ததை போன்று காட்சியளிக்கிறது.
இந்திய சந்தையில் அறிமுகமாகும் பட்சத்தில் மாருதி ஹஸ்லர் மாடல் எஸ் பிரெஸ்ஸோ போன்று மைக்ரோ எஸ்யுவி பிரிவில் நிலைநிறுத்தப்படும் என்று தெரிகிறது. இதன் விலையும் எஸ் பிரெஸ்ஸோவுக்கு நிகராகவே நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

- பிஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிளில் புது அப்டேட் தவிர வேறு மாற்றங்கள் இல்லை.
- இந்த பைக்கிலும் 312சிசி சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் தனது G 310 RR மோட்டார்சைக்கிளை முற்றிலும் புதிய நிறத்தில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக் தற்போது காஸ்மிக் பிளாக் 2, வைட் மற்றும் M ஸ்போர்ட் கிராஃபிக்ஸ் மற்றும் ரேசிங் புளூ மெட்டாலிக் நிறங்களில் கிடைக்கிறது.
இதன் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. வாடிக்கையாளர்கள் இதனை ரூ. 3 லட்சத்து 05 ஆயிரம். எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே வாங்கிட முடியும். ரேசிங் புளூ மெட்டாலிக் நிற வேரியண்ட் ரெட், வைட் மற்றும் பிளாக் அக்சென்ட்கள் செய்யப்பட்டு உள்ளன.

புதிய நிறம் தவிர இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த பைக்கிலும் 312சிசி, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே எஞ்சின் பிஎம்டபிள்யூ G 310 R மற்றும் G 310 GS மாடல்களிலும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் டிவிஎஸ் அபாச்சி RR 310 மற்றும் RTR 310 மோட்டார்சைக்கிள் மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், இவற்றின் டியூனிங்கில் மாற்றம் செய்யப்படுகிறது. பிஎம்டபிள்யூ மாடலில் இந்த எஞ்சின் 34 ஹெச்பி பவர், 27.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.
இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ G 310 RR மோட்டார்சைக்கிள் கேடிஎம் RC 390, டிவிஎஸ் அபாச்சி RR 310 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
- சிட்ரோயன் பசால்ட் மாடல் இருவித எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
- பசால்ட் மாடல் ஏராளமான வசதிகளை கொண்டுள்ளது.
சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது பசால்ட் மாடலை அறிமுகம் செய்தது. புதிய பசால்ட் கூப் எஸ்யுவி விலை ரூ. 7 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது. இது அறிமுக விலை என சிட்ரோயன் தெரிவித்துள்ளது. இந்த காருக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 11,001 ஆகும்.
புதிய பசால்ட் கூப் எஸ்யுவி மாடலின் அறிமுக விலை அக்டோபர் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 2024 சிட்ரோயன் பசால்ட் மாடலில் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் NA மற்றும் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வடிவங்களில் வழங்கப்படுகிறது.

இவற்றில் டர்போ வெர்ஷன் 109 ஹெச்பி பவர், 190 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. NA பெட்ரோல் யூனிட் 80 ஹெச்பி பவர், 115 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இதில் NA பெட்ரோல் யூனிட் உடன் 5-ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இந்த காரில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், இரட்டை அடுக்கு கிரில், சில்வர் ஸ்கிட் பிலேட்கள், வட்ட வடிவ ஃபாக் லைட்கள், பிளாக்டு அவுட் ORVM-கள், B-பில்லர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் டூயல் டோன் அலாய் வீல்கள், ஸ்லோபிங் ரூஃப்லைன், ராப்-அரவுண்ட் டெயில் லைட்கள், ஷார்க் ஃபின் ஆன்டெனா வழங்கப்படுகிறது.
அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- இதில் 7 இன்ச் TFT டிஸ்ப்ளே, ஆப்பிள் கார்பிளே வசதிகள் உள்ளன.
- இந்த பைக்கில் 1890சிசி, V-டுவின் எஞ்சின் உள்ளது.
இந்தியன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் 2024 ரோட்மாஸ்டர் எலைட் மாடல் ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மாடல் இந்தியாவில் வெளியாகி உள்ளது. லிமிட்டெட் எடிஷன் மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த பைக் 1904 இந்தியன் கேமல்பேக்-ஐ பறைசாற்றும் வகையில் உள்ளது.
புதிய இந்தியன் ரோட்மாஸ்டர் எலைட் விலை ரூ. 71 லட்சத்து 82 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில், இது நாட்டின் விலை உயர்ந்த மோட்டார்சைக்கிள் மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த பைக் உலகம் முழுக்க 350 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ளன.

இந்த பைக் பிரத்யேக 3-டோன் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. இதில் ஸ்டிரைக்கிங் ரெட் மற்றும் பிளாக் அக்சென்ட்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த பைக்கின் பியூவல் டேன்க், எஞ்சின் மற்றும் ஃபூட் ரெஸ்ட் ஆகியவற்றில் எலைட் பிரான்டிங் இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் கிளாஸ் பிளாக் டேஷ், பிளாக்டு அவுட் வின்ட்ஸ்கிரீன், கைகளால் பெயின்ட் செய்யப்பட்ட சிவப்பு நிற ஸ்டிரைப்கள் உள்ளன.
புதி ரோட்மாஸ்டர் பைக்கில் 10-ஸ்போக்குகள் கொண்ட டைமன்ட் கட் அலாய் வீல்கள், மெட்சீலர் குரூயிஸ்டெக் டயர்களை கொண்டிருக்கின்றன. இதில் 7 இன்ச் TFT டிஸ்ப்ளே, ஆப்பிள் கார்பிளே, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், எல்இடி லைட்டிங் சிஸ்டம், எல்இடி கார்னெரிங் லைட்கள், 12 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
2024 ரோட்மாஸ்டர் எலைட் மாடலில் 1890சிசி, V-டுவின் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இது 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த பைக் 412 கிலோ எடை கொண்டுள்ளது.
- மாடல்கள் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் மட்டுமே கிடைக்கும்.
- அனைத்து விலைகளும், எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் டைகுன் மிட்-சைஸ் எஸ்யூவி, விர்டுஸ் மிட்சைஸ் செடான் மற்றும் டிகுவான் எஸ்யூவி ஆகிய 3 மாடல்களுக்கு பெருமளவு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.
டைகுன் மீதான தள்ளுபடிகள் கடந்த மாதம் கிடைத்ததை விட கணிசமான அளவு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் விர்டுஸ் மற்றும் டிகுவான் மீதான தள்ளுபடிகள் சற்று குறைந்துள்ளன. தள்ளுபடி மற்றும் சலுகைகள் ஒவ்வொரு நகரத்திற்கு ஏற்பட மாறுபடும்.
சில டீலர்கள் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், டொயோட்டா ஹைரைடர், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் வரவிருக்கும் டாடா கர்வ்வ் மற்றும் சிட்ரோயன் பாசால்ட் ஆகியவற்றுக்கு போட்டியாக விளங்கும் ஜெர்மன் பிராண்டின் MY2023 மாடல்களை இன்னும் வைத்திருக்கிறார்கள்.
இந்த மாடல்கள் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் மட்டுமே கிடைக்கும். மேலும் இவற்றுக்கு அதிகபட்சம் ரூ.2.28 லட்சம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

MY2024 மாடல்களுக்கு வரும் மாறுபாட்டைப் பொறுத்து, VW 1.0 லிட்டர் TSI பதிப்புகளில் ரூ. 1.2 லட்சம் வரை தள்ளுபடியையும், 1.5 TSI மாடல்களில் ரூ. 1.87 லட்சம் வரையிலான தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. ரொக்க தள்ளுபடியுடன், என்ட்ரி லெவல் டைகுன் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.11.70 லட்சத்தில் இருந்து ரூ.10.90 லட்சமாக குறைந்துள்ளது.
ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் ஸ்கோடா ஸ்லேவியா ஆகிய மாடல்களுக்கான ஃபோக்ஸ்வேகனின் பதிலாக அறிமுகம் செய்யப்பட்ட கார் வோக்ஸ்வேகன் விர்டுஸ். இந்த மாடலுக்கு தற்போது ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இதன் மிட் ரேஞ்ச் 1.0 TSI ஹைலைன் AT வேரியண்டிற்கு அதிகபட்ச தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதற்கிடையில், 1.5 TSI எஞ்சின் கொண்ட விர்டுஸ் மாடலுக்கு ரூ.70,000 வரையிலான பலன்களை பெறுகிறது.
விர்டுஸ் மற்றும் டைகுன் ஆகியவை 115 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் மற்றும் 150 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களுடன் கிடைக்கின்றன. இவற்றுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
வோக்ஸ்வேகன் டிகுவான் மாடலுக்கு ரூ. 1.5 லட்சம் வரை பலன்கள் வழங்கப்படுகின்றன. இது 2023 இல் தயாரிக்கப்பட்ட மாடல்களுக்கு மட்டுமே பொருந்தும். MY2024 டிகுவான் மாடலுக்கு இந்த மாதத்தில் ரூ.1.25 லட்சம் வரை மொத்த பலன்கள் வழங்கப்படுகிறது.
டிகுவான் மாடலில் 190 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 2.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் மற்றும் 7 ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இது வோக்ஸ்வேகனின் 4 மோஷன் AWD தொழில்நுட்பம் வழியாக 4-வீல் டிரைவ் வசதியை வழங்குகிறது. ஐந்து இருக்கைகள் கொண்ட எஸ்யூவியின் விலை தற்போது ரூ.35.17 லட்சமாக உள்ளது.
அனைத்து விலைகளும், எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- குளோபல் என்கேப் கிராஷ் டெஸ்டில் ஐந்து நட்சத்திர புள்ளிகளுடன் பாதுகாப்பான கார் என்ற சாதனையையும் இது பெற்றுள்ளது.
- தற்போது, பெட்ரோல், CNG மற்றும் EV பவர்டிரெய்ன்களுடன் பன்ச் மாடல் விற்பனைக்கு கிடைக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் வேரியன்ட் 4 லட்சம் யூனிட் விற்பனையை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2021-ம் ஆண்டு அக்டோரில் அறிமுகப்படுத்தபட்ட பன்ச், சிட்ரோயன் C3 மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் ஆகியவற்றுக்கு போட்டியாக உள்ளது.
அறிமுகமான 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1 லட்சம் யூனிட் விற்பனையை அதாவது உற்பத்தி தொடங்கிய 10 மாதங்களில் எட்டியது. இதைத் தொடர்ந்து மே 2023 மற்றும் டிசம்பர் 2023 இல் முறையே 2 லட்சம் மற்றும் 3 லட்சம் யூனிட் விற்பனையானது. குளோபல் என்கேப் கிராஷ் டெஸ்டில் ஐந்து நட்சத்திர புள்ளிகளுடன் பாதுகாப்பான கார் என்ற சாதனையையும் இது பெற்றுள்ளது.
பன்ச் பிராண்ட் குறைந்த காலத்தில் அதிக விற்பனை மைல்கல்லை அடைய உதவிய ஒரு முக்கிய காரணமாக, ஒரு குறுகிய காலத்தில் பல்வேறு வகையான எரிபொருள் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுவது தான். தற்போது, பெட்ரோல், CNG மற்றும் EV பவர்டிரெய்ன்களுடன் பன்ச் மாடல் விற்பனைக்கு கிடைக்கிறது.

EV மற்றும் இரட்டை-CNG சிலிண்டர் கொண்ட வெர்ஷன்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. முன்னதாக, இது ஒரு சிலிண்டர் சிஎன்ஜி டேங்கில் மட்டுமே கிடைத்தது.
பன்ச் மாடலின் ஒட்டுமொத்த விற்பனையில் பெட்ரோல் எஞ்சின் வேரியண்ட்கள் மட்டும் 53 சதவீதம் ஆகவும் இதைத் தொடர்ந்து 33 சதவீதம் CNG ஆப்ஷனாகவும் உள்ளது. சிட்ரோயன் eC3க்கு போட்டியை ஏற்படுத்தும் இந்த காரின் EV மாடல், 14 சதவீத விற்பனையைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் டாடா பன்ச் EV வாங்கிய வாடிக்கையாளர்களில் 21 சதவீதம் பேர் முதல்முறை கார் உரிமையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- இன்டீரியர் C3 ஏர்கிராஸில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது.
- சி3 ஏர்கிராஸ் போலல்லாமல், பாசால்ட் தரமான 1.2 பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது.
சிட்ரோயன் பாசால்ட் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக சில விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு;-
இந்தியாவில் இது சிட்ரோயனின் நான்காவது கார். இது C-Cubed திட்டத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் இருவிதமான பெட்ரோல் எஞ்சின் விருப்பங்களில் வழங்கப்படும்.
உட்புறங்கள் மற்றும் அம்சங்கள்:-
இப்போது முதல் முறையாக, சிட்ரோயன் வாகனத்தின் உட்புற தோற்றம் வெளியாகியுள்ளது. கேபின் ஒரு பழுப்பு மற்றும் கருப்பு நிறத்தில் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. இதன் இன்டீரியர் C3 ஏர்கிராஸில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது.
இருப்பினும், பின்புற ஏசி வென்ட்களுடன் கூடிய காலநிலை கட்டுப்பாடு, இரண்டாவது வரிசையை அட்ஜெட் செய்யும் வசதி, முழு எல்இடி ஹெட்லேம்ப்கள், இரண்டு வரிசைகளுக்கும் ஆர்ம்ரெஸ்ட்கள் மற்றும் ஆறு ஏர்பேக்குகள் ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது.
சன்ரூஃப், சுற்றுப்புற விளக்குகள், காற்றோட்டமான இருக்கைகள் மற்றும் பட்டன்கள் போன்ற அம்சங்கள் இந்த காரில் இடம்பெறவில்லை. பூட் ஸ்பேஸ் 470-லிட்டராக உள்ளது, அதே நேரத்தில் வீல்பேஸ் 2.64-மீட்டராக உள்ளது, இது செக்மென்ட்டில் உள்ள பெரிய கார்களில் ஒன்றாகும்.

பவர்டிரெய்ன் விருப்பங்கள்:-
சி3 ஏர்கிராஸ் போலல்லாமல், பாசால்ட் தரமான 1.2 பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது.
இதன் NA யூனிட் 82bhp மற்றும் 155Nm உற்பத்தி செய்கிறது மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படுகிறது.
டர்போ பெட்ரோல் யூனிட் 109 bhp மற்றும் 190 nm டார்க் திறனை வெளிப்படுத்துகிறது.
நிறங்கள் மற்றும் வடிவமைப்பு சிறப்பம்சங்கள்:-
பாசால்ட் ஆறு வெவ்வேறு வண்ணங்களில் வழங்கப்படும் மற்றும் மாறுபாட்டைப் பொறுத்து அலாய் வீல்களுக்கு இரண்டு வெவ்வேறு வடிவமைப்புகளை கொண்டிருக்கும்.
வழக்கமான கதவு கைப்பிடிகள், ஃபாஸ்ட்பேக் ரூஃப்லைன், வீல் ஆர்ச்களில் பிளாக் கிளாடிங் மற்றும் முழு LED லைட் பேக்கேஜ் ஆகியவை இதன் மற்ற சிறப்பம்சங்கள் ஆகும்.
போட்டி மற்றும் துவக்கம்
பசால்ட் இந்த ஆண்டின் பிற்பகுதியில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சிட்ரோயனின் புதிய பட்ஜெட் ரக ஃபிளாக்ஷிப் மாடல் ஆகும்.
இது ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், எம்ஜி ஆஸ்டர் மற்றும் ஹோண்டா எலிவேட் போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும்.
இந்த காரில் உள்ள புது அம்சங்கள் இந்நிறுவனத்தின் மற்ற 3 சிட்ரோயன் பட்ஜெட் கார்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது.
- மோட்டார் 168bhp மற்றும் 350Nm பீக் டார்க்கை உருவாக்கும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது.
- டாடா கர்வ் மாடலானது ஆகஸ்ட் 7 ஆம் தேதி அன்று ICE மற்றும் EV ஆகிய இரண்டிலும் அறிமுகமாக உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆகஸ்ட் மாதம் ஹேரியர் மற்றும் சஃபாரி மாடல்களுக்கு அதிக தள்ளுபடியை வழங்குகிறது. இந்த சலுகை MY2023 மாடல்களுக்கு குறிப்பிட்ட ஸ்டாக் உள்ள வரை மட்டுமே வழங்கப்படும்.
சஃபாரியின் MY2023 மாடல்களைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்கள் ரூ.1.60 லட்சம் வரையிலான சலுகைகளை அனைத்து மாடல்களிலும் பெறலாம்.
ஹேரியர் மாடலைப் பொறுத்த வரை ரூ.1.45 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. தற்போது, டாடா சஃபாரி மற்றும் ஹேரியர் ஆகியவை எக்ஸ் ஷோருமில் ஆரம்ப விலையாக முறையே ரூ. 16.19 லட்சம் மற்றும் ரூ. 14.99 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த 2 மாடல்களும் 2.0-லிட்டர் க்ரையோடெக் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சினுடன் இணைந்து ஆறு-வேக மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்ட்டர் யூனிட் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றன. இந்த மோட்டார் 168bhp மற்றும் 350Nm பீக் டார்க்கை உருவாக்கும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, டாடா கர்வ் மாடலானது ஆகஸ்ட் 7 ஆம் தேதி அன்று ICE மற்றும் EV ஆகிய இரண்டிலும் அறிமுகமாக உள்ளது. டாடாவின் இந்த புதிய கூபே SUV ஆனது, பிராண்டின் புதிய 1.2-லிட்டர் Hyperon டர்போ-பெட்ரோல் எஞ்சினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.






