என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    • பேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடலின் நைட் எடிஷன் அறிமுகமாகி உள்ளது.
    • புதிய கிரெட்டா மாடல் இருவித எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய கிரெட்டா மாடல் காரை அறிமகம் செய்துள்ளது. புதிய கிரெட்டா நைட் எடிஷன் மாடலின் விலை ரூ. 14 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த மாடல் 1.5 லிட்டர் MPI பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    புதிய கிரெட்டா நைட் எடிஷன் மாடல்கள் S(O) மற்றும் SX(O) வேரியண்ட்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கின்றன. ஏற்கனவே கிரெட்டா பிரீ-ஃபேஸ்லிப்ட் மாடலில் நைட் எடிஷன் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இதே வரிசையில், பேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மாடலின் நைட் எடிஷன் அறிமுகமாகி உள்ளது.

    இந்த காரில் பிளாக் பெயிண்ட், பிளாக் வீல்கள், ரெட் பிரேக் கேலிப்பர்கள், மேட் லோகோ, பிளாக் ORVM-கள், பிளாக் ஸ்பாயிலர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. உள்புறம் இருக்கை மேற்கவர்கள் இன்டீரியர் முழுக்க பிளாக் நிறத்தால் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளன. இத்துடன் ஸ்டீரிங் மற்றும் கியர் லீவர் உள்ளிட்டவை லெதரால் மறைக்கப்பட்டு இருக்கின்றன.

    கிரெட்டா நைட் எடிஷன் மாடல் 1.5 லிட்டர் MPi பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர் U2 CRDi டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், CVT டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு AT டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. 

    • டாடா கர்வ் மாடல் அறிமுக சலுகையாக குறைந்த விலையில் கிடைக்கிறது.
    • டாடா கர்வ் மாடல் மூன்று வித எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது முற்றிலும் புதிய கர்வ் கூப் எஸ்யுவி மாடலை சமீபத்தில் அறிமுகம் செய்தது. புதிய டாடா கர்வ் மாடலின் விலை ரூ. 10 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது அறிமுக விலை ஆகும். இந்த விலை அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் மேற்கொள்ளப்படும் முன்பதிவுகளுக்கு மட்டுமே பொருந்தும்.

    இந்தியாவில் பல்வேறு விற்பனை மையங்களில் டாடா கர்வ் மாடல் வந்தடைந்துள்ளது. மேலும், இந்த காருக்கான டெஸ்ட் டிரைவ்கள் விரைவில் துவங்கும் என்று தெரிகிறது. புதிய டாடா கர்வ் மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. இந்த காரின் வினியோகம் செப்டம்பர் 12 ஆம் தேதி துவங்க உள்ளது.

     


    புதிய டாடா கர்வ் மாடலில் ஸ்லோபிங் ரூஃப்லைன், ஃபிளஷ் ஃபிட் டோர் ஹேண்டில்கள், ஸ்ப்லிட் ஹெட்லேம்ப்கள், எல்இடி லைட் பார்கள், எல்இடி டெயில் லைட்கள், மல்டி-ஸ்போக் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. உள்புறத்தில் பானரோமிக் சன்ரூஃப், வென்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள் வழங்கப்படுகின்றன.

    இத்துடன் 12.3 இன்ச்டச் ஸ்கிரீன் யூனிட், டிஜிட்டல் கலர் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 360 டிகிரி கேமரா, ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் டெயில் கேட், 2-ஸ்டெப் ரிக்லைனிங் சீட்கள், வயர்லெஸ் சார்ஜிங், கூல்டு கிளவ் பாக்ஸ் மற்றும் லெவல் 2 ADAS சூட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகன்றன.

    புதிய டாடா கர்வ் மாடல்- 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் GDi டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மூன்றுவித எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், 7 ஸ்பீடு DCT யூனிட் வழங்கப்படுகிறது. 

    • பல புதுப்பிக்கப்பட்ட அம்சங்கள் மற்றும் வசீகரமான புதிய வண்ணங்களில் கிடைக்கும்.
    • புதிய 'கிளாசிக் 350 பைக்' ரூ.1 லட்சத்து 99 ஆயிரத்து 500 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கும்.

    ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 பைக் கடந்த 2008-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் இருந்து அதன் பாரம்பரியமான வாகன வடிவமைப்பு, ரசனைமிகு அம்சங்கள் மற்றும் தனித்துவமான பொறியியல் பாரம்பரியம், ராயல் என்பீல்டின் மரபணுவின் சாராம்சத்தையும் தக்கவைத்து வருகிறது. அந்தவகையில், புதிய '2024 கிளாசிக் 350' பைக் கண்கவர் புதிய தோற்றத்துடன் பெருமையுடன் அறிமுகமாகியுள்ளது. அதுமட்டுமின்றி அதன் பாரம்பரிய புகழையும் அப்படியே கொண்டுள்ளது.

    மிடுக்கான வாகனம் என்ற நற்பெயரை பாதுகாக்கும் அதே நேரத்தில் அனைவரும் அணுகக்கூடியதாகவும் தொடர்ந்து நீடிக்கிறது. பல புதுப்பிக்கப்பட்ட அம்சங்கள் மற்றும் வசீகரமான புதிய வண்ணங்களில் கிடைக்கும். இந்த புதிய 'கிளாசிக் 350 பைக்' ரூ.1 லட்சத்து 99 ஆயிரத்து 500 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கும். இதற்கான முன்பதிவு மற்றும் சோதனை ஓட்ட சேவைகள் இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் முதல் தொடங்கியுள்ளது.


    ஹெரிடேஜ் (மெட்ராஸ் ரெட், ஜோத்பூர் புளூ), ஹெரிடேஜ் பிரீமியம் (மெடாலியன் புளூ), சிக்னல்ஸ் (கமாண்டோ சாண்ட்), டார்க் (கன் கிரே மற்றும் ஸ்டீல்த் பிளாக்) மற்றும் குரோம் (எமரால்டு) ஆகிய 5 புதிய ரகங்களில் 7 பளபளக்கும் வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது. இந்த பைக்கில் எல்.இ.டி. முகப்பு விளக்கு, 'பைலட் லேம்ப்', 'கிளஸ்டரில் கியர் பொசிஷன்' இன்டிகேட்டர் மற்றும் 'டைப் சி' சார்ஜிங்க் பாயிண்ட் போன்ற பல்வேறு பயனுள்ள புதிய அம்சங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் பி.கோவிந்தராஜன் கூறுகையில், ''ராயல் என்பீல்டின் தூய்மையான மோட்டார் சைக்கிளிங் மரபணுவின் அசல் பிரதிபலிப்பாக 'கிளாசிக் 350' இருக்கும். அதன் மிடுக்கு, நுட்பமான வேலைப்பாடுகள் மற்றும் காலத்தால் அழியாத ஸ்டைலான அழகின் அப்பழுக்கற்ற அடையாளமாகவும் இருக்கும்'' என்றார்.

    மேற்கண்ட தகவல் ராயல் என்பீல்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • புதிய கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் ஏராளமான நிறங்களில் கிடைக்கிறது.
    • இந்த பைக்கிலும் 349சிசி சிங்கில் சிலிண்டர் எஞ்சின் கொண்டுள்ளது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் 2024 கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய கிளாசிக் 350 விலை ரூ. 2 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் புதிய நிறங்கள் மற்றும் அம்சங்களை கொண்டிருக்கிறது.

    2024 ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மாடலில் முற்றிலும் புதிய எல்இடி ஹெட்லைட், பொசிஷன் லைட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது மோட்டார்சைக்கிளுக்கு ரெட்ரோ ஸ்டைல் தோற்றத்தை வழங்குகிறது. இத்துடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கிளட்ச் பிரேக் லீவர்கள், கியர் பொசிஷன் இன்டிகேட்டர் மற்றும் யுஎஸ்பி டைப் சி சார்ஜர் வழங்கப்படுகிறது.

    இந்த மோட்டார்சைக்கிள் தற்போது எமிரால்டு, ஜோத்பூர் புளூ, கமாண்டோ சாண்ட், மெட்ராஸ் ரெட், மெடாலியன் பிரான்ஸ், சான்ட் கிரே மற்றும் ஸ்டெல்த் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதில் ஸ்டெல்த் பிளாக் நிற வேரியண்டில் மட்டுமே அலாய் வீல் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

    புதிய கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளிலும் 349சிசி, சிங்கில் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 20.2 ஹெச்பி பவர், 27 நியூட்டன் மீட்டன் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 

    • புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளன.
    • மாற்றங்களை பஜாஜ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் உலகின் முதல் CNG மோட்டார்சைக்கிள் - பஜாஜ் பிரீடம் CNG-ஐ கடந்த ஜூலை மாதம் அறிமுகம் செய்தது. பஜாஜ் பிரீடம் CNG மாடலின் விலை ரூ. 94 ஆயிரத்து 995, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் டாப் என்ட் மாடல் விலை இதுவிட அதிகம் ஆகும்.

    இந்த நிலையில், பஜாஜ் நிறுவனம் தனது பிரீடம் CNG மோட்டார்சைக்கிளின் குறைந்த விலையில் கிடைக்கும் புது வெர்ஷனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், இந்த பைக் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளன.

    புதிய வெர்ஷனில் விலை குறைப்புக்கு ஏற்ற மாற்றங்களை பஜாஜ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. குறைந்த விலை CNG பைக் அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாத இறுதிக்குள் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கலாம்.

     


    பஜாஜ் பிரீடம் CNG பைக்கின் புது வெர்ஷனில் எல்இடி யூனிட்-க்கு மாற்றாக ஹாலோஜன் லைட், புதிய ஹெட்லைட் பிராகெட் வழங்கப்படலாம். இதே போன்று டெலிஸ்கோபிக் ஃபோர்க்கை சுற்றி இருந்த கவருக்கு பதிலாக பிளாஸ்டிக்-ஆல் ஆன ஃபோர்க் கெயிட்டர்கள் வழங்கப்படுகின்றன.

    பாடி பேனல்கள் மறைக்கப்பட்டு இருப்பதால், இந்த பைக் சிங்கில் டோன் பெயின்டிங் செய்யப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. இத்துடன் புதிய ஃபென்டர்கள் மற்றும் ஸ்பிலாட்டர் கார்டுகள் வழங்கப்படுகின்றன.

    இந்த பைக்கிலும் 125சிசி எஞ்சின் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த யூனிட் 9.3 ஹெச்பி பவர், 9.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும்.

    • புதிய எம்ஜி ZS ஹைப்ரிட்+ 1.5-லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினை கொண்டிருக்கிறது.
    • எலெக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்பட்டு இருக்கிறது.

    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் சர்வதேச சந்தையில் தனது புதிய ZS மாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. புதிய 2025 எம்ஜி ZS மாடல் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் பல மாற்றங்களைக் கொண்டுள்ளது.

    உலகளவில், புதிய ZS மாடல் ஹைப்ரிட்+ வடிவில் வழங்கப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில், இந்த கார் ஐசி எஞ்சின் மற்றும் எலெக்ட்ரிக் என இருவிதங்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதன் எலெக்ட்ரிக் மாடல் ZS EV என்றும் ஐசி எஞ்சின் கொண்ட மாடல் ஆஸ்டர் என்ற பெயரிலும் விற்பனைக்கு வரும்.

    வெளிப்புறத்தில், புதிய ZS மாடல் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பெரிய கிரில், அகலமான மற்றும் செங்குத்தாக வடிவமைக்கப்பட்ட ஏர் டேம்ப்கள், ஹெட்லேம்ப் கிளஸ்டரை இணைக்கும் அளவுக்கு அகல லைட் பார் மற்றும் மெல்லிய எல்இடி டிஆர்எல்-கள் வழங்கப்படுகின்றன. இந்த காரில் எம்ஜி லோகோ பொனெட்டில் பொருத்தப்பட்டு இருக்கிறது.

    பக்கவாட்டில் இந்த கார் அதன் முந்தைய வெர்ஷனை போன்றே காட்சியளிக்கிறது. இத்துடன் சற்றே மாற்றம் செய்யப்பட்ட அலாய் வீல் டிசைன் கொண்டுள்ளது. பின்புறத்தில், முற்றிலும் புதிய ZS மாடல் அதிக மாற்றங்களை கொண்டுள்ளது. இதன் பம்ப்பர் டிசைன் மாற்றப்பட்டு, டெயில் லேம்ப்களும் புதுவித டிசைன் கொண்டிருக்கின்றன.



    உட்புறத்தில், 12.3-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், மறுவடிவமைப்பு கொண்ட ஏசி வென்ட்கள், புதிய ஸ்டீரிங், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், ரீடிசைன் செய்யப்பட்ட சென்டர் கன்சோல் மற்றும் புதிய கியர் லீவர் கொண்டுள்ளது. அம்சங்களைப் பொறுத்தவரை, புதிய ZS ஹைப்ரிட்+ வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, ADAS சூட், டைப்-சி சார்ஜிங் போர்ட், ஆட்டோ ஹோல்டு, எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, 360 டிகிரி கேமரா மற்றும் வயர்லெஸ் சார்ஜர் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய எம்ஜி ZS ஹைப்ரிட்+ 1.5-லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினை கொண்டிருக்கிறது. இத்துடன் எலெக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்பட்டு இருக்கிறது. இவை இரண்டும் இணைந்து 192 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 8.7 நொடிகளில் எட்டிவிடும்.

    • இந்த வேரியண்டில் தற்போது டூயல் டோன் வெர்ஷன்கள் எதுவும் இடம்பெறவில்லை.
    • டாப் எண்ட் வேரியண்டில் மட்டும் தான் தற்போது டூயல் டோன் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

    சிட்ரோயன் சமீபத்தில் இந்தியாவில் புதுப்பிக்கப்பட்ட C3 ஹேட்ச்பேக்கை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது, இதன் விலை ரூ.6.16 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). அதன் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் விரைவில் கிடைக்கும். அதே வேளையில், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பசால்ட் மாடலில் இருந்து இந்த கார் சில அம்சங்களைப் பெற இருக்கிறது.

    மடிக்கக்கூடிய மேற்கூரை கைப்பிடிகள்

    இது அடிப்படை அம்சமாக இருந்தாலும், C3 மாடலில் இது வழங்கப்படவில்லை. தற்போது இந்த மாடலின் அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்படுகிறது. முன்புற மற்றும் பின்புற பயணிகள் இதனை பயன்படுத்தலாம். காரின் ரியர் விண்டோ ஸ்விட்ச்கள் வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறது. இதன் பேஸ் வேரியண்டில் முன்புறம் பவர் விண்டோக்கள் வழங்கப்படுகின்றன.

    மிட் ரேஞ்ச் மாடல்களில் மாற்றங்கள்

    மிட் ரேஞ்ச் வேரியண்டில் தற்போது இசோஃபிக்ஸ் குழந்தைகளுக்கான ஆங்கரேஜ் வழங்கப்படுகிறது. இத்துடன் 3-பாயிண்ட் சீட் பெல்ட்கள் உள்ளன. இந்த வெர்ஷனில் டெசரா ஃபுல்-வீல் கவர் மற்றும் அனோடைஸ் செய்யப்பட்ட கிரே நிற இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் உள்ளது. இந்த வேரியண்டில் தற்போது டூயல் டோன் வெர்ஷன்கள் எதுவும் இடம்பெறவில்லை.



    டாப் எண்ட் மாடல்களின் அம்சங்கள்

    டாப் எண்ட் வேரியண்டில் மட்டும் தான் தற்போது டூயல் டோன் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்கள் போலார் வைட், செஸ்டி ஆரஞ்சு, பிளாட்டினம் கிரே மற்றும் காஸ்மோ புளூ உள்ளிட்டவைகளில் ஒன்றே தேர்வு செய்து கொள்ளலாம். இத்துடன் எஞ்சின் ஸ்டார்ட் / ஸ்டாப், இஎஸ்பி, ஹில்-ஹோல்டு கண்ட்ரோல், டிபிஎம்எஸ் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.

    இவைதவிர ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், பவர்டு விங் மிரர்கள், சைடு டர்ன் இன்டிகேட்டர்கள், எல்இடி விஷன் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஆறு ஏர்பேக், ஏழு இன்ச் அளவில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் வழங்கப்பட்டு இருக்கிறது.

    கனெக்டிவிட்டி ஆப்

    சிட்ரோயன் நிறுவனம் முற்றிலும் மேம்பட்ட மை சிட்ரோயன் கனெக்ட் ஆப்-ஐ அறிமுகம் செய்துள்ளது. டாப் எண்ட் மாடலை வாங்குவோருக்கு இதில் உள்ள 40 ஸ்மார்ட் அம்சங்களும் வழங்கப்படுகிறது.

    • முழுமையாக சார்ஜ் செய்தால் 375 முதல் 400 கிமீ வரை செல்லும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
    • INGLO பிளாட்ஃபார்மில் உருவான முதல் கார் மாடலான மஹிந்திரா XUV.e8, XUV 700 உடன் நிறைய பொதுவானதாக இருக்கும்.

    மஹிந்திரா நிறுவனம் XUV 3XO காம்பாக்ட் SUV மற்றும் XUV.e8 இன் எலெக்ட்ரிக் மாடலை இந்தியாவில் அடுத்ததாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்து கதவுகள் கொண்ட தார் ராக்ஸ்ஸுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, மஹிந்திரா தனது SUV வரிசையை ஒருங்கிணைக்கிறது.

    1. மஹிந்திரா XUV 3XO EV:

    ஐந்து இருக்கைகள் XUV 3XO அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அதன் ICE வேரியண்டில் இருந்து ஏராளமான அம்சங்களை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், சி வடிவ எல்இடி டே-டைம் ரன்னிங் லைட்டுகள், புதிய ஒய் வடிவ அலாய் வீல்கள், வலது முன்பக்க ஃபெண்டருக்கு மேல் சார்ஜிங் போர்ட், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முன்பக்க கிரில் மற்றும் பம்பர் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

    வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி கொண்ட ஃபுளோடிங் ரக 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 360 டிகிரி கேமரா சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், ஏழு ஸ்பீக்கர்கள் கொண்ட ஹர்மன் கார்டன் ஆடியோ, டூயல்-ஜோன் ஆகியவை வழங்கப்படுகிறது. தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, EPB (எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக்) ஆட்டோ ஹோல்ட், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்கள், ஆறு ஏர்பேக்குகள் மற்றும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படுகின்றன.

    மஹிந்திரா XUV 3XO EV ஆனது பிரபலமான Tata Punch EV மற்றும் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் டாடா நெக்சான் EVயின் மாடல்களுடன் நேரடியாக போட்டியிடும். இது 34.5 kWh பேட்டரி பேக்கைக் கொண்டிருக்கும். XUV 400, முழுமையாக சார்ஜ் செய்தால் 375 முதல் 400 கிமீ வரை செல்லும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கூடுதலாக, இந்த கார் DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும்.

    2. மஹிந்திரா XUV.e8:



    INGLO பிளாட்ஃபார்மில் உருவான முதல் கார் மாடலான மஹிந்திரா XUV.e8, XUV 700 உடன் நிறைய பொதுவானதாக இருக்கும். இது ஒரு பெரிய 80 kWh பேட்டரி பேக்குடன் பொருத்தப்பட்டிருக்கும், இது 550 கிலோமீட்டருக்கும் அதிகமான ரேஞ்ச்-ஐ வழங்கும். இது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு வரும்.

    மஹிந்திரா XUV.e8 ஆனது வரவிருக்கும் நடுத்தர அளவிலான மின்சார SUVகளான ஹுண்டாய் கிரெட்டா EV, மாருதி சுசுகி eVX, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டாடா கர்வ் EV, எம்ஜி வின்ட்சர் EV, எம்ஜி ZS EV மற்றும் பிஒய்டி அட்டோ 3 போன்றவற்றுடன் நேருக்கு நேர் மோதும். இது 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமாகும்.

    • ரூ. 6 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.
    • இந்த கார் இருவித எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் இந்திய விற்பனையாளர்கள் பல கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் பலன்களை வழங்குகிறது. இதில் எம்ஜி குளோஸ்டர், ஹெக்டர், ஆஸ்டர், ZS EV மற்றும் கொமெட் EV மாடல்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படுகிறது.

    அதன்படி எம்ஜி குளோஸ்டர் மாடலுக்கு ரூ. 6 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. தற்போது இந்த மாடலின் விலை ரூ. 38 லட்சத்து 80 ஆயிரத்தில் துவங்கி ரூ. 43 லட்சத்து 87 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் இந்திய சந்தையில் டொயோட்டா பார்ச்சூனர், ஸ்கோடா கோடியக், ஜீப் மெரிடியன் மற்றும் நிசான் எக்ஸ்-டிரெயில் போன்ற மாடல்களுக்கு போட்டியாக உள்ளது.

     


    எம்ஜி ஹெக்டார் மாடலுக்கு ரூ. 3 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 13 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது. இந்த கார் ஹூண்டாய் அல்கசார் மற்றும் மஹிந்திரா XUV700 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இந்த கார் 2.0 லிட்டர் டீசல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    எம்ஜி ஆஸ்டர் மாடலை வாங்கும் போது ரூ. 2 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ. 9 லட்சத்து 98 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது இந்திய சந்தையில் கிடைக்கும் குறைந்த விலை மிட்-சைஸ் எஸ்யுவி மாடல்களில் ஒன்றாகும். இந்த கார் 1.5 லிட்டர் NA பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    எம்ஜி ZS EV மற்றும் கொமெட் EV மாடல்களை வாங்கும் போது முறையே ரூ. 2.2 லட்சம் மற்றும் ரூ. 90 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. 

    • புது ஹெல்மெட் ப்ளூடூத் இன்டர்காம் சிஸ்டம் பிரீமியம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.
    • இதில் உள்ள பேட்டரியை முழு சார்ஜ் செய்தால் 16 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது.

    பெங்களூரை சேர்ந்த ஹார்டுவேர் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான ப்ளூஆர்மர் இந்திய சந்தையில் தனது அதிநவீன ஹெல்மெட் ப்ளூடூத் இன்டர்காம் சிஸ்டத்தை அறிமுகம் செய்தது. ப்ளூஆர்மர் C50 ப்ரோ என அழைக்கப்படும் புது இன்டர்காம் சிஸ்டம் டாப் என்ட் மாடல் என்பதால் பிரீமியம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

    அம்சங்களை பொருத்தவரை புதிய ப்ளூஆர்மர் C50 ப்ரோ மாடல் அனைத்து விதமான வானிலைகளின் போதும் பயன்படுத்தலாம். பிரத்யேக டிசைன், மவுன்டிங் பாயிண்ட் கொண்டிருக்கும் புது ஹெல்மெட் உறுதியான இன்டர்காம் சிஸ்டத்தை வழங்குகிறது. இதில் உள்ள மேக்டாக் சிஸ்டத்தில் பயனர்கள் மெயின் யூனிட்-ஐ மவுன்ட் செய்து கொள்ளலாம்.

    இதில் வழங்கப்பட்டுள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 16 மணி நேர்திற்கான பேக்கப் வழங்குகிறது. இதில் 2-ம் தலைமுறை மெஷ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது பயணங்களின் போது தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்துகிறது. இதில் கோப்ரோ சாதனத்திற்கு ஏற்ற வகையில் மல்டி-பாயிண்ட் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஹெல்மெட்டில் ரைடு ஆரா எனும் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் இரு லைட்களை கொண்டுள்ளது. இதனை சதாாரண லைட்களாகவும், எச்சரிக்கை லைட்களாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சிஸ்டத்திற்கு ஓவர் தி ஏர் அப்டேட்களும் வழங்க முடியும்.

    இந்திய சந்தையில் புதிய ப்ளூஆர்மர் C50 ப்ரோ மாடலின் விலை ரூ. 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே ப்ளூஆர்மர் C30 மாடலை பயன்படுத்துவோர், அதனை கொடுத்துவிட்டு புதிய C50 ப்ரோ மாடலை வாங்கும் போது ரூ. 11 ஆயிரம் மட்டுமே செலுத்தினால் போதுமானது. இந்த சலுகை செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்வோருக்கு மட்டுமே பொருந்தும். 

    • விற்பனை ஆகாமல் உள்ள இந்த கார்களின் மதிப்பு கிட்டத்தட்ட 73 ஆயிரம் கோடி ஆகும்.
    • இந்தியாவில் தற்போது ஒரு கார் விற்பனை ஆவதற்கு 70-75 நாட்கள் வரை ஆகிறது.

    இந்திய முழுவதும் கிட்டத்தட்ட 7.3 லட்சம் கார்கள் விற்பனை ஆகாமல் உள்ளது என்று ஆட்டோமொபைல் டீலர் சங்கங்களில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

    விற்பனை ஆகாமல் உள்ள இந்த கார்களின் மதிப்பு கிட்டத்தட்ட 73 ஆயிரம் கோடி ஆகும்.

    ஜூலை மாத தொடக்கத்தில் ஒரு கார் டீலர்ஷிப் கடைகளுக்கு வந்தபிறகு 65-67 நாட்களுக்குள் விற்பனையாகி வந்தது. ஆனால் இப்போது ஒரு கார் விற்பனை ஆவதற்கு 70-75 நாட்கள் வரை ஆகிறது.

    அதே சமயம் 4 லட்சம் கார்கள் தான் விற்பனை ஆகாமல் உள்ளது என்று இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் மதிப்பிட்டுள்ளது.

    • டாடா பன்ச் மாடல் விற்பனையில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.
    • இந்தியாவில் அதிகம் விற்பனையான கார் மாடல்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் மாடல் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் என்ற பெருமையை பெற்றது. மாருதி நிறுவனத்தின் வேகன்ஆர் மாடலை பின்னுக்குத்தள்ளி இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் என்ற பெருமையை பன்ச் பெற்றது.

    இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் டாடா பன்ச் மாடல் சுமார் 1 லட்சத்து 26 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இதே காலக்கட்டத்தில் மாருதியின் வேகன்ஆர் மாடல் 1 லட்சத்து 16 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.

    இந்த பட்டியலில் அதிகம் விற்பனையான மூன்றாவது கார் மாடல் என்ற பெருமையை ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெசட்டா மாடல் பெற்று இருக்கிறது. இந்தியாவின் ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையிலான காலக்கட்டத்தில் கிரெட்டா மாடல் 1 லட்சத்து 09 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.

    இந்தியாவில் அதிகம் விற்பனையான கார்களில் மாருதி பிரெஸ்ஸா மற்றும் எர்டிகா மாடல்கள் முறையே நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களை பிடித்துள்ளன. இவை முறையே 1 லட்சத்து 05 ஆயிரம் மற்றும் 1 லட்சத்து 04 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளன.

    ×