

இந்த விலை ஏற்றம் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அறிமுகம் செய்யப்பட்ட கார்களுக்கு BNVSAP நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது. அக்டோபர் 2019 முதல் அனைத்து மாடல்களுக்கும் இது கட்டாயமாக்கப்படுகிறது. இரண்டு ஏர் பேக், ஸ்பிட் அலர்ட் சிஸ்டம், சீட் பெல்ட் ரிமைண்டர், பின்பக்க பார்க்கிங் சென்சர் முதலியானவை கட்டாயமாக்கப்படுகிறது.
ஹூண்டாய் வென்யூ மற்றும் சாண்ட்ரோ கார்கள் கே1 பிளாட்பார்மில் தயாராகிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் சாண்ட்ரோ ஹாட்ஸ்பேக் காரானது புது கே1 பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்டது. இது முந்தைய பிஏ பிளாட்பார்மை விட 63 சதவிகிதம் பலமானதாகும். சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கோனா எலக்ட்ரிக் மற்றும் வென்யூ கார்களுக்கு இந்த விலை ஏற்றம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.