search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்த க்விட் ஹேட்ச்பேக்
    X

    இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்த க்விட் ஹேட்ச்பேக்

    ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் ஹேட்ச்பேக் கார் இந்திய விற்பனையில் புதிய மைல்கல் கடந்து இருப்பதாக அறிவித்துள்ளது.



    ரெனால்ட் இந்தியா நிறுவனம் இதுவரை சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்திய சந்தையில் மூன்று லட்சம் யூனிட்கள் விற்பனை ரெனால்ட் நிறுவனத்திற்கு மிகப்பெரும் மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் வாகனங்கள் பிரிவில் ரெனால்ட் க்விட் கார் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. ரெனால்ட் க்விட் கார் சந்தையில் அறிமுகமாகும் போதே பல்வேறு அம்சங்களை முதல் முறையாக பெற்றிருந்தது. என்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் மாடலில் முதல்முறையாக தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் க்வி்ட் காரில் வழங்கப்பட்டது. 

    2015 ஆம் ஆண்டு முதல்முறை அறிமுகமான க்விட் ஹேட்ச்பேக் மாடல் பின் சில சிறிய மாற்றங்களுடன் விற்பனை செய்யப்படுகிறது. ரெனால்ட் நிறுவனம் 1.0 லிட்டர் என்ஜின் கொண்ட க்விட் காரை அறிமுகம் செய்தது. தற்சமயம் ரெனால்ட் க்விட் கார் ரூ.2.67 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ.4.63 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது.



    இந்த விலையில் ரெனால்ட் க்விட் காரில் 7.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற கனெக்டிவிட்டி வசதியை வழங்குகிறது. ரெனால்ட் க்விட் கார் இருவித பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இதன் ஸ்டான்டர்டு வேரியண்ட் 799சிசி, 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 53.3 பி.ஹெச்.பி. பவர், 72 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கிறது. இத்துடன் க்விட் கார் 999சிசி, 3-சிலி்ண்டர் என்ஜினுடன் கிடைக்கிறது.

    இந்த என்ஜின் 67 பி.ஹெச்.பி. பவர், 91 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் மாடல் 5-ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் வசதியுடனும் கிடைக்கிறது. பாதுகாப்பை பொருத்தவரை க்விட் காரில் டிரைவர் பகுதியில் ஏர்பேக், ஏ.பி.எஸ்., ஸ்பீடு வார்னிங், முன்புறம் சீட்பெல்ட் வார்னிங் போன்றவை வழங்கப்படுகிறது.
    Next Story
    ×