என் மலர்

  கன்னி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo

  இந்த வார ராசிப்பலன்

  27.2.2023 முதல் 5.3.2023 வரை

  கடனை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய வாரம். ராசியை 4,7-ம் அதிபதி குரு, மற்றும் உச்சம் பெற்ற 2,9-ம் அதிபதி சுக்ரன் பார்ப்பதால் சுணங்கிக் கிடந்த காரியங்களில் இருந்து வந்த தடை தாமதம் நீங்கி எதிலும் வெற்றி உண்டாகும். குலத்தொழில், கூட்டுத் தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பேச்சாற்றலால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பீர்கள்.

  1,10-ம் அதிபதி புதன் 5, 6-ம் அதிபதி சனி மற்றும் விரய அதிபதி சூரியனுடன் ராசிக்கு ஆறாமிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் சேர்க்கை பெறுவதால் பொறுப்புகள் அதிகரிக்கும்.வேலையில்லா மல் இருப்பவர்களுக்கு முயற்சிகள் எடுத்தபின் நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு அரசு பணியில் அமர்கின்ற வாய்ப்பு உண்டாகும்.பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். இட மாற்றம் ஏற்படும். உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையும் உயரும்.

  வழக்குகள் சாதகமாகும். சிலருக்கு கடன் அல்லது பொருள் இழப்பு அல்லது சிறு நோய் தாக்கம் உண்டாகலாம். வீண் கவலைகளை விடுத்து உங்கள் கடமைகளை சரியாகச் செய்யுங்கள். அனைத்தும் வெற்றி பெறும் நல்ல காலமாக இந்த வாரம் அமையும். தினமும் சிவபுராணம் படிக்க காரிய வெற்றி உண்டாகும்.

  'பிரசன்ன ஜோதிடர்'

  ஐ.ஆனந்தி

  செல்: 98652 20406

  ×